மீண்டும் மோகன்லாலுடன் இனையும் பிருத்விராஜ் வித்தியாசமான தலைப்பு.

சென்னை 20 ஜூன் 2021

மீண்டும் மோகன்லாலுடன் இனையும் பிருத்விராஜ் வித்தியாசமான தலைப்பு.

மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “அய்யப்பனும் ஜோஷியும்”.

தென்னிந்திய திரைப்பட உலகை ரசிகர்களை இந்த திரைப்படம் திரும்பி பார்க்க வைத்தது.

எனவே இந்த திரைப்படத்தை மற்ற மொழிகளில் மொழி மாற்றம் செய்ய கடுமையான போட்டி நிலவுகிறது.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படமான “கோல்ட் கேஸ்” என்ற திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இதனிடையில் மோகன்லால் நடித்த ‘லூசிபர்’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் மிக் பெரியதாக வெற்றி பெற்றார் நடிகர் ப்ருத்விராஜ்.

இந்த திரைப்படமும் பெரும் வெற்றி பெற மற்ற மொழிகளில் மொழி மாற்றம் செய்ய கடுமையாக போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் நடிகர் பிருத்விராஜ் தனது அடுத்தப்பட இயக்கம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

“BRO DADDY“ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் மீண்டும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க உள்ளார்.

காமெடி கலந்த குடும்பப் பாங்கான கதைக்களம் கொண்ட இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

https://twitter.com/PrithviOfficial/status/1405865252227629057?s=19

 

error: Content is protected !!