வெளிநாடுகளில் சிக்கிய தவிக்கும் 1000 கேரளா மாநிலத்தைச் மலையாளிகளின் விமான டிக்கெட் செலவை ஏற்ற கொண்ட நடிகர் மம்மூட்டி.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக உலகில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் எல்லா துறை மக்களும் வேலை இழந்து தவிக்கின்றனர்.

இந்த நிலையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மலையாளிகளுக்கு உதவ முன் வந்துள்ளார் நடிகர் மம்மூட்டி.

பிரபலமான மலையாள டிவி சேனலான கைரளியின் சார்பாக இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட இருப்பதாக அதன் நிர்வாக இயக்குனர் ஜான் பிரிட்டஸ் தெரிவித்துள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நடத்தும் தென்னிந்திய சேனலான கைரளி டிவியின் தலைவராக மெகாஸ்டார் மம்மூட்டி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வந்தே பாரத் எனும் திட்டத்தின் அடிப்படையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இதுவரையிலும் 64 விமானங்கள் மூலம் இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கையை முதல் கட்டமாக 12 நாடுகளில் மேற்கொண்டு வருகிறது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!