பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் இன்று காலை மாரடைப்பினால் காலமானார்.

சென்னை 30 ஏப்ரல் 2021

பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் இன்று காலை மாரடைப்பினால் காலமானார்.

தொடர்த்து திடீர் இழப்புகளை சந்தித்து வருகிறது தமிழ்த் திரைப்பட உலகம்

சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ நடிகர் விவேக் மரணமடைந்து அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாத தமிழ் திரைப்பட உலகம்

அடுத்ததாக ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் கே.வி. ஆனந்தை இழந்து தவிக்கிறோம்.

அவருக்கு தற்போதைய வயது 54

விகடன் நிறுவனத்தில் பத்திரிகையில் புகைப்படக்கலைஞராக தனது பயணத்தை தொடங்கினார் கே.வி. ஆனந்த்.

ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த திரைப்படங்கள்.

அவர் ஒளிப்பதிவாளராக நீ புரிந்த முதல் திரைப்படம் தென்மாவின்கொம்பத்
(மலையாளம், 1994)

1995-ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

மின்னாரம் (மலையாளம், 1994)

புண்யபூமி நா தேசம் (தெலுங்கு, 1995)

காதல் தேசம் (தமிழ், 1996)

நேருக்கு நேர் (தமிழ், 1997)

டோலி சஜா கே ரக்னா (ஹிந்தி, 1998)

1999 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து வெளி வந்த முதல்வன்
திரைப்படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

ஜோஷ் (ஹிந்தி, 2000)

நாயக் (ஹிந்தி, 2001)

விரும்புகிறேன் (தமிழ், 2002)

த லெஜன்ட் ஆஃப் பகத்சிங் (ஹிந்தி, 2002)

பாய்ஸ் (தமிழ், 2003)

செல்லமே (தமிழ், 2004)

காக்கி (ஹிந்தி, 2004)

சிவாஜி: தி பாஸ் (தமிழ், 2007)

தமிழ் திரைப்படத் துறையில் ஒளிப்பதிவாளராக நுழைந்து அதன்பின்னர் இயக்குநராக அவதாரம் எடுத்தவர்.

2005ஆம் ஆண்டில் வெளிவந்த
கனா கண்டேன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குனராக அறிமுகமானார்.

அந்த கனாக்கண்டேன் திரைப்படத்தில
பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடித்திருந்தனர்.

2009-ஆம் ஆண்டு வெளிவந்த அயன் திரைப்படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றார்.

அதன் பிறகு தொடர்ந்து 2009 அயன் 2012 மாற்றான் 2019 காப்பான் எனப் பல படங்களை நடிகர் சூர்யாவை கதாநாயகனாக வைத்து இயக்கினார்.

நடிகர் ஜீவாவை கதாநாயகனாக வைத்து 2010 கோ படத்தை இயக்கினார்.

நடிகர் தனுஷை கதாநாயகனாக வைத்து 2015 அனேகன் படத்தை இயக்கினார்.
.
நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக வைத்து 2017 கவண் திரைப்படத்தை இயக்கினார்.

அதற்கு பின் பல இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி உள்ளார்.

ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான
கே.வி.ஆனந்துக்கு நேற்று இரவு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாக அவரே காரை ஓட்டிக் கொண்டு மருத்துவமனையில் போய் அட்மிட் ஆகியிருக்கிறார்.

ஆனால், அவரது உயிரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை.

இன்று அதிகாலை 3 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது!

தற்போது ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் இருக்கும் அவரது உடல் குடும்பத்தினரிடம் காலை 9 மணிக்கு மேல் ஒப்படைக்கப்படும்  எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கே.வி. ஆனந்த் அவர்களின் வீடு சென்னை அடையாறில் இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் இயக்குனர் கே.வி.ஆனந்த்தின் மரணம் தமிழ் திரைப்பட உலகை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பல்வேறு தரப்பினர், அரசியல், சினிமா பிரபலங்கள் கே.வி.ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!