தல தளபதியின் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன இதுதானா.?

சென்னை 12 ஆகஸ்ட் 2021 தல தளபதியின் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன இதுதானா.?

தமிழ் திரைப்பட உலகில் தளபதி என்றால் அது விஜய். தல என்றால் அஜித்குமார்.

அதுபோல் அரசியலில் தளபதி என்றால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.

கிரிக்கெட்டில் தல என்றால் மஹேந்திர சிங் தோனி தான்.

இந்த நிலையில் கிரிக்கெட் தல தோனியும் சினிமா தளபதி விஜய்யும் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் சந்தித்துள்ளனர்.

‘பீஸ்ட்’ திரைப்பட படப்பிடிப்பில் தளபதி விஜய்யும் CSK கிரிக்கெட் விளம்பரத்தில் தல தோனியும் கலந்துக் கொண்டுள்ளனர்.

இருவரும் ஒரே படப்பிடிப்புத் தளத்தில் இருவருக்கும் படப்பிடிப்பு நடந்ததால் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது இருவரும் சந்தித்த போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!