பிரபல நடிகர் காளிதாஸ் காலமானார்.

சென்னை 12 ஆகஸ்ட் 2021

பிரபல நடிகர் காளிதாஸ் காலமானார்.

பிரபல நடிகர் மரணம்… வடிவேலுவுடன் பல படங்களில் நடித்தவ

தமிழ் திரைப்பட உலகில் பல வருடங்களாக இயக்குனர் ராமநாராயணன் மற்றும் இயக்குநர் வி சேகர் படங்களிலும் நடித்தவர் நடிகர் காளிதாஸ்.

பல வில்லன் நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

நடிகர் வைகைப்புயல் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

பெரிய திரை மட்டுமில்லாமல் சின்னத்திரையில் சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

கணீர் குரலுக்கு சொந்தமானவர்.

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார்.

அவரின் மறைவுக்கு தமிழ் திரைப்பட உலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.