உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் இவர்கள் தானா?

சென்னை 12 ஆகஸ்ட் 2021 உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் இவர்கள் தானா?

பிரபல விஜய் தொலைக்காட்சியில் இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் நான்கு சீசன்களில் வெற்றி பெற்றது.

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் ஐந்தின் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மிகவும் பிரபலமானது.

இதுவரை ஒளிபரப்பான நான்கு சீசன்களும் தமிழக ரசிகர்களை கவர்ந்தது என்றே சொல்லலாம்.

விரைவில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் என்று தகவல்கள் அடிக்கடி வந்துக் கொண்டிருக்கிறது.

கொரோனா 2-ம் அலையால் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் 5 நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக்டாக் ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிகா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

ஆனால், இந்த பட்டியல் உறுதி செய்யப்படவில்லை. விரைவில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!