தனது செல்ல நாய்க்குட்டி பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார் பிக்பாஸ் பிரபலம்்.
சென்னை 30 மே 2021
தனது செல்ல நாய்க்குட்டி பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார் பிக்பாஸ் பிரபலம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகை கேப்ரில்லா.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை கேப்ரில்லா. 
இவர் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் ஐந்து லட்சத்தை பெற்றுக் கொண்டு வெளியேறினார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கேப்ரில்லா அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
இந்த நிலையில் தனது செல்ல நாய் குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த வீடியோவை தற்போது பதிவு செய்துள்ளார்.
செல்லமாக தான் வளர்த்து வரும் செல்ல நாய்க் குட்டிக்கு பிறந்தநாள் கேக் வெட்டி, அதை நாய்க்கு ஊட்டும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CPalGusDuEJ/?utm_source=ig_web_copy_link











