Friday, June 18
Shadow

பிக்பாஸ் சீசன் 5 தொடங்குவது எப்போது? – புதிய அப்டேட்.

சென்னை 10 ஜூன் 2021

பிக்பாஸ் சீசன் 5 தொடங்குவது எப்போது? – புதிய அப்டேட்.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 5-வது சீசன் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி.

இந்த நான்கு சீசன்களும்
நிகழ்ச்சியை உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வின்னராக ஜெயித்தனர்.

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும்.

ஆனால் கடந்த வருடம் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை.

பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் நோய் தொற்றின் 2-வது அலை பரவல் காரணமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வருடம் போலவே இந்த வருடமும் அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்க அதன் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கம்போல் இந்த சீசனையும் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளாராம்.

CLOSE
CLOSE