நடிகர் கார்த்தியிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்து நடிப்பு வாய்ப்பை வாங்கியிருக்கிறாராம் நடிகை அதிதி ஷங்கர்.

சென்னை 07 செப்டம்பர் 2021 நடிகர் கார்த்தியிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்து நடிப்பு வாய்ப்பை வாங்கியிருக்கிறாராம் நடிகை அதிதி ஷங்கர்.

தனது தந்தை ஷங்கருக்கு துளியும் விருப்பம் இல்லாத நிலையில் அடம் பிடித்து தமிழ் திரைப்பட உலகில் முத்திரை பதிக்க வருகிறார் நடிகை அதிதி ஷங்கர்.

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களில், ஓரளவு சுமாரான கதைகளைக் கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனம் தற்போது “விருமன்” என்று தலைப்பிடப்பட்ட புதிய திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

இதில் கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து
சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் நடிகர் கார்த்தி மீண்டும் இணைகிறார்.

இந்த திரைப்படத்தை, தொடர்ந்து ஜாதிவெறிப் திரைப்படங்களை இயக்கிவரும் முத்தையா இயக்குகிறார்.

‘கொம்பன்’ திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் உடன் இணைந்து நடித்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சூரி, அதிதிஷங்கர் (அறிமுகம்) (இவர்தான் இயக்குநர் ஷங்கர் மகள்) மற்றும் பலர் நடிக்கின்றார்கள்.

இந்த “விருமன்” திரைப்படமும் கிராமத்து பின்னணியில், உறவுகளின் கதையைச் சொல்லும் குடும்ப கதை உள்ள திரைப்படமாக உருவாகவுள்ளது.

இந்த “விருமன்” திரைப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இணையும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

‘மாநகரம்’ உட்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.கே.செல்வகுமார் இந்த “விருமன்” திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த “விருமன்” திரைப்படத்திற்கு
அனல் அரசு சண்டைக் காட்சிகளை அமைக்கின்றார்.

நடிகர் சூர்யாவின் குடும்பமும் இயக்குநர ஷங்கரின் குடும்பமும் தி.நகரில் அருகருகே வசிக்கிறார்கள்.

எனவே தந்தை கொஞ்சமும் சம்மதம் தெரிவிக்காத நிலையில் நடிகர் கார்த்தியிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்து நடிப்பு வாய்ப்பை வாங்கியிருக்கிறாராம் நடிகை அதிதி ஷங்கர்.

error: Content is protected !!