ஆச்சார்யா’ திரைப்படத்தின் இயக்குனர் ரவி மாராடைப்பால் இன்று காலை காலமானார்.

சென்னை 28 டிசம்பர் 2021 ‘ஆச்சார்யா’ திரைப்படத்தின் இயக்குனர் ரவி மாராடைப்பால் இன்று காலை காலமானார்.

இயக்குநர் பாலாவிடம் இனை இயக்குநராக பல திரைப் படங்களில் பணிபுரிந்தவர் இயக்குனர் ரவி.

இவர், ‘ஆச்சார்யா’ என்ற திரைப்படத்தை இயக்கியதின் மூலம் ‘ஆச்சார்யா’ ரவி என்று அழைக்கப்பட்டார்.

இயக்குனர் பாலாவின் நெருங்கிய நண்பரும் அவரது திரைப்படங்களின் இணை இயக்குநருமான ‘ஆச்சார்யா’ ரவி திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54

இதில் ஆச்சார்யா திரைப் படத்தில் கதாநாயகனாக விக்னேஷ் நடித்தார்.

நாசர், வடிவுக்கரசி, தென்னவன், தேவன், கஞ்சா கருப்பு, சரண்ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

2006-ம் ஆண்டு இப்படம் வெளியானது.

சேது திரைப்படம் வெளி வருவதற்கு முன் இயக்குனர் பாலாவும் ரவியும் ஒரே அறையில் நண்பர்களாக இருந்தார்கள்

இருவரும் ’போடா வாடா’ என்று அழைத்து கொள்ளும் அளவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள்.

அதற்குப் பின் அடுத்த திரைப்படத்திற்கான பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போக, ரவி தொடர்ந்து தனது தேடுதல் வேட்டையை தொடங்கினார்.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு
உடல்நலக் குறைவால் காரணமாக திடீர் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட அவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் ரவி, இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

ரவியின் மரணத்துக்குத் தமிழ்த் திரையுலகினர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!