காலத்தால் அழியாத திரைப்பாடல்களை எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன் இன்று காலை காலமானார்.

சென்னை 08 செப்டம்பர் 2021 காலத்தால் அழியாத திரைப்பாடல்களை எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன் இன்று காலை காலமானார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அவைத் தலைவர் கவிஞர் புலமைபித்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

அவருக்கு வயது 86

பாடலாசிரியரும், எழுத்தாளருமான கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார்.

சிறந்த பாடலாசிரியருக்கான தமிழ்நாடு அரசின் விருதை 4 முறை கவிஞர் புலமைப்பித்தன் பெற்றுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9.33 மணிக்கு உயிர் பிரிந்தது.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு பல்வேறு பாடல்களை எழுதிப் புகழ் பெற்றுத் தந்தவர் கவிஞர் புலமை பித்தன்.

கவிஞர் புலமை பித்தன்.
அக்டோபர் 6, 1935 ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பள்ளப்பாளையத்தில் பிறந்தார்.

இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். 1964-இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார்.

அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.

இவர் தமிழக சட்ட மேலவையின் துணைத் தலைவராகவும், அதிமுக அவைத்தலைவராகவும் பதவி வகித்தார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் “அரசவைக் கவிஞராகவும்” நியமிக்கப்பட்டார்.

இவர் எம். ஜி. ஆரின் நெருங்கிய நண்பரும் ஆவார்.

இளமைக் காலத்தில் இரவில் பஞ்சாலையில் பணி, பகலில் பேரூர் தமிழ்க்கல்லூரியில் படிப்பு என 1961ல் புலவர் பட்டம் பெற்றார்.

திருச்செந்தூருக்கு அருகே உள்ள ஆத்தூரில் தமிழ் ஆசிரியராகப் பணியைத் துவங்கிய இவர் முதன்முதலில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ‘நான் யார் நான் யார் நீ யார்…’என்ற பாடலை எழுதி வரவேற்பை பெற்றார்.

தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை 4 முறை பெற்றுள்ளார்.

சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகள்

1977-1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

1980-1981 எங்கம்மா மகாராணி

1988-நிறைய திரைப்படங்களுக்கு

1993-பத்தினிப்பெண்

தமிழக அரசின் விருதுகள்தொகு

-2001இல் தமிழக அரசின் பெரியார் விருது

இவர், சட்டமேலவை உறுப்பினர் மற்றும் அரசவைக்கவிஞர் ஆகிய பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

புலவர் புலமை பித்தன் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இறவாப் புகழ்கொண்ட பாடல்களைத் தந்தவர்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாய் நின்றவர்.

error: Content is protected !!