ராக்கி திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகர் நயன்தாரா சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்.

சென்னை 30 டிசம்பர் 2021 ராக்கி திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகர் நயன்தாரா சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்.

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சென்னையில் உள்ள பிரபல எஸ்கேப் சினிமா திரையரங்கில் திரைப்படம் பார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் நடிகர் வசந்த் ரவி, இயக்குனர் இமயம் பாரதிராஜா, ரவீணா ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ராக்கி’. இந்த திரைப்படத்தை நயன்தாரா – விக்னேஷ் சிவன், தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் வாங்கி வெளியிட்டிருந்தனர்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய இந்த ராக்கி திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ராக்கி திரைப்படத்தை எஸ்கேப் சினிமாஸில் திரையரங்குகில் திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

இந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது..

error: Content is protected !!