சில நேரங்களில் சில மனிதர்கள் திரை விமர்சனம் ரேட்டிங் –3.5 /5

நடிகர் நடிகைகள் – அசோக் செல்வன், ரியா மணிகண்டன்.K, அபி ஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், K.S.ரவிகுமார், இளவரசு, பானுப்ரியா, அனுபமா குமார், மற்றும் பலர்.
இயக்கம் – விஷால் வெங்கட்.
ஒளிப்பதிவு – மெய்யேந்திரன்.K.
படத்தொகுப்பு – பிரசன்னா G.K.
இசை – ரதன்.
தயாரிப்பு – AR என்டெர்டெய்ன்மென்ட், டிரைடன்ட் ஆர்ட்ஸ்.
ரேட்டிங் –3.5 /5
காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும்.
மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது.
பல மாற்றங்கள் சமுதாய வாழ்வில் புதுமையானைவயாக இருந்தாலும் தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே, நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் ஒரு நாவல்.
அதே பெயரில் 1976 ஆண்டு வெளி வந்தது நடிகை லக்ஷ்மி, நடிகர் ஶ்ரீகாந்த் நடித்து பெரிதும் பேசப்பட்ட ஒரு திரைப்படம்.
இதே தலைப்பில் இந்த திரைப்படம் உருவகியுள்ளது.
தலைப்புக்கு நியாயம் செய்து இருக்கிறது இந்த சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம்.
நமது செயல்பாடுகள் அனைத்தும் நமக்கு சரியாக தோன்றலாம்.
ஆனால் மற்றவர்களின் பார்வைக்கு அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான்.
சாதித்தவர்களின் பேச்சும் சாதுவானவர்கள் பேச்சை கேட்டு அவர்களின் அனுபவப்படி நடந்தால் நல்லது.
கொடுக்கப்பட்ட வேலையும் எடுக்கப்பட்ட வேலையும்
முழுமையாக செய்ய முடியாவிட்டால் என்ன பிரச்னை வரும் ?
நகை பணம் விலை உயர்ந்த பொருட்கள் ஆடம்பரம் வாழ்க்கையில்லை என்பதை நமக்கு காலம் நமக்கு புரியவைக்கும்.
பணத்தை மீறிய வாழ்க்கை இருக்கிறது.
இப்படி நான்கு கதைகளை கொண்ட திரைப்படம்தான் சில நேரங்களில் சில மனிதர்கள்.
கதையின் களமாக உயர்தர மக்கள் நடுத்தர மக்கள் அடித்தட்டு மக்கள் என்று மூன்று நான்கு தர மக்களின் குணநலன்களையும் இவர்களின் வாழ்வியலையும் சூழல்களையும் மிக யதார்த்தமாக பதிவாக்கிய அறிமுக இயக்குனர் விஷால் வெங்கட் பாராட்டுக்குரியவர் சமீப தமிழ் திரைப்பட உலகில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவர்
மொபைல் போன் விற்கும் கடையில் வேலை பார்ப்பவர் கதாநாயகன் அசோக் செல்வன்.
அவருடைய தந்தை நாசரிடம் எப்போதுமே கோபமாகப் பேசுபவர் தான நினைப்பதை மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைப்பவர் கதாநாயகன் அசோக் செல்வன்.
தனது மகனின் திருமணப் பத்திரிகை சொந்த பந்தங்களுக்கு கொடுக்கும் வேலையை ஆரம்பிக்க நினைக்கிறார் கதாநாயகன் அசோக் செல்வனின் தந்தை
நாசர்.
ஆனால், தந்தை நாசர் எது பேசினாலும் பிறகு போகலாம் எனப் பதில் பேசி அதைத் தடுக்கிறார் கதாநாயகன் அசோக் செல்வன்.
தனது மகன் கதாநாயகன் அசோக் செல்வன் சொல்லும் பேச்சையும் மீறி தனது சொந்த பந்தங்களுக்கு திருமண பத்திரிகையைக் கொடுக்கச் செல்கிறார் நாசர்.
தனது சொந்த பந்தங்களுக்கு திருமண பத்திரிக்கை கொடுத்து விட்டு திரும்பும் வழியில் விபத்தில் மரணமடைகிறார் கதாநாயகன் அசோக் செல்வன் தந்தை நாசர்.
தனது மனைவியுடன் காரை ஓட்டிக்கொண்டு சண்டை செய்துகொண்டே வரும் போது கதாநாயகன் அசோக் செல்வனின் தந்தை நாசர்
மீது கார் ஏற்றிக் விபத்தில் சிக்குகிறார் சாப்ட்வேர் எஞ்சினியர் பிரவீண் ராஜா.
விபத்தில் மரணமடைந்து
சாலையில் விழுந்து கிடக்கும் கதாநாயகன் அசோக் செல்வனின் தந்தை நாசரைக் காப்பாற்ற நினைத்து நடந்த விபத்து நடிகர் அபிஹாசன் மீது பழி விழுகிறது.
கதாநாயகன் அசோக் செல்வன் தந்தை நாசரை கடைசியாக பைக்கில் ஏற்றி வந்து பாதி வழியில் இறக்கிவிடுகிறார் மணிகண்டன்.
கதாநாயகன் அசோக் செல்வன், அபிஹாசன், பிரவீண் ராஜா, மணிகண்டன் ஆகியோர் கதாநாயகன் அசோக் செல்வன் தந்தை நாசர் மரணத்தினால் ஏற்படும் பாடத்தைக் கற்றுக் கொள்கிறார்கள்
அபிஹாசன் அந்தப் பையில் இருந்து தப்பிக்கிறார்? தப்பிக்க வில்லையா?
என்பதுதான் இந்த சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தின் மீதிக் கதை.
சில நேரங்களில் சில மனிதர்கள் இந்த
திரைப்படத்தில் நான்கு கதைகளின் நாயகர்களாக நடித்திருக்கும் கதாநாயகன் அசோக் செல்வன், அபிஹாசன், மணிகண்டன், பிரவின் ராஜா என அனைவரின் நடிப்பும் எதார்த்தமாகவும் கதையின் கதாபாத்திரங்களாக தென்படுகிறது.
தான் நினைப்பது மட்டுமே சரி, தான் செய்வது மட்டுமே சரி, தனது விருப்பத்தைத்தான் மற்றவர்களும் தொடர வேண்டும் என்ற அடங்காத எண்ணத்தில் இருப்பவராக கதாநாயகன் அசோக் செல்வன்.
சிறந்தவன் இருந்தாலும் கோவத்தில் அரக்கனாகவும், தான் சொல்வதைதான் கேட்க வேண்டும் என்ற குணம் கொண்டவராக கதாநாயகன் அசோக் செல்வன்.
ஒரு ரிசார்ட்டில் இருக்கும் அறைகளை சுத்தம் செய்யும் ரூம் மேனேஜ்மெண்ட் வேலை பார்த்து வரும் ஏழை இளைஞன் மணிகண்டன்.
செய்யும் வேலையை ஏதோ கடமைக்குச் செய்தால் போதும், அதை விரும்பி, ரசித்து, மனப்பூர்வமாக செய்யத் தேவையில்லை என்று நினைப்பவர் மணிகண்டன்.
தனக்கான அங்கீகாரமும், மதிப்பும் வருமானமும் கிடைக்கவில்லையே என மன வருத்தத்தில் வாழ்ந்து வருகிறார் மணிகண்டன்.
திரைப்பட துறையில் பிரபல இயக்குனராக திகழ்பவர் கே.எஸ்.ரவிகுமாரின் மகன் அபிஹாசன். நண்பர்கள் அனைவரும் இணைந்து உருவாக்கிய அவருடைய முதல் திரைப்படத்தில் நடித்து அதன் வெளியீட்டுக்காக காத்திருப்பவர்.
தன்னுடைய சிந்தனை மட்டுமே சரியானது என்று நினைத்து, உலகம் வேறு போக்கில் தப்பாக இயங்குவதாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்
அபிஹாசன்.
சென்டிமென்ட் எல்லாம் வாழ்க்கையில் தேவையே இல்லை, அழுகை எல்லாம் ஒரு உணர்வே இல்லை என நினைப்பவர் அபிஹாசன்.
திருமணமாகி மனைவி குழந்தையுடன் வாழ்ந்து வருபவர் பிரவின் ராஜா.
வாழ்க்கையில் வசதியாக வாழ வேண்டும், ஒரு வாட்ச் வாங்கினால் கூட காஸ்ட்லியாக இருக்க வேண்டும் என பணத்தின் மிதப்பில் இருப்பவர் பிரவீண் ராஜா.
பணமும் புகழும் தான் உலகில் மதிப்பை அளிக்கும் என நம்புகிற இவர், யாரிடமும் உதவி கேட்டு தன் மதிப்பை இழுந்து விட கூடாது என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வருகிறார்.
கீழ்தட்டு மேல்தட்டு நடுத்தரக் குடும்பத்து இளைஞனாக கதாநாயகன் அசோக் செல்வன்.
நுனிநாக்கு ஆங்கிலத்தில் அடிக்கடி ‘ஷிட், ஷிட்’ எனப் பேசி ஹை–பை இளைஞனாக அபிஹாசன்.
எப்போதுமே பந்தா பண்ணும் இளைஞனாக பிரவீண் ராஜா.
என்னடா வாழ்க்கை இது அடிக்கடி சலித்துக் கொள்ளும் இளைஞனாக மணிகண்டன்.
என நான்கு பேரும் அவரவர் கதாபாத்திரங்களில் மிகவும் யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் நான்கு பேரும் ஒரு மரணத்திற்கு காரணமாகி விடுகின்றனர்.
நாசரின் நடிப்பில் அவரது அனுபவம் முத்திரை பதிக்கிறது.
தாயில்லாமல் வளர்ந்த தனது மகனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கு அப்பாவாக கண் கலங்க வைக்கிறார்.
சில நேரங்களில் சில மனிதர்கள் இந்த
திரைப்படத்தில் முன்று கதைகளின் நாயகிகளாக நடித்திருக்கும் ரித்விகா, அஞ்சுகுரியன் மற்றும் ரியா ஆகியோர் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கதாநாயகன் அசோக் செல்வன் காதலியாக ரியா.
வருங்கால மாமனார் நாசரின் இறுதிச்சடங்கின் போது தனது காதலன் செய்தா தவறைச் சுட்டிக்காட்டி பேசும் காட்சியில் தனது பேச்சாலேயே அசோக் செல்வத்தின் ஆணவத்திற்கு பளாரென்று ஒரு அறை விட்டது போல பேசுகிறார்.
அது போலவே, கணவர் பிரவீண் ராஜாவின் தவறை காரில் செல்லும் போது ரித்விகா, சுட்டிக்காட்டிப் பேசும் காட்சியும் அமைந்துள்ளது.
மனைவியரின் பேச்சைக் கேட்க மறுக்கும் கணவன்களுக்கு ‘பளீர்’ என புத்தி புகட்டுகிறார்கள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அழகான உணர்வுபூர்வ திருப்தியை தருகிற நல்ல திரைப்படமாக சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் அமைந்திருக்கிறது.
மிக நேர்த்தியான திரைக்கதை, சினிமாவுக்கான எந்த பூச்சும் இல்லாமல் கதையை தவிர்த்து வேறு எங்கும் செல்லாமல் அழகாக அந்த வாழ்க்கைக்குள் நம்மை கொண்டு சேர்த்து விடுகிறார் இயக்குனர் விஷால் வெங்கட்.
திரைப்படத்தின் காட்சிகளை படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன்.
திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களை அந்த சம்பவம் நடக்கும் இடத்திற்கே கொண்டு போகும் அளவிற்கு காட்சிபடுத்தியிருக்கிறார்.
திரைப்படத்திற்கு கூடுதல் பலம் இசை.
ரதனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
பின்னணி இசையில் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படம் நல்லதொரு பாடம்.











