கிளாப் திரை விமர்சனம் ரேட்டிங் 3.25./ 5

நடிகர் நடிகைகள் – ஆதி, ஆகான்ஷா சிங், நாசர், பிரகாஷ் ராஜ், க்ரிஷா குருப், முனீஸ் காந்த், மைம் ” கோபி, பிரம்மாஜி, I B கார்த்திகேயன், குமார் சந்தானகிருஷ்ணன், மீனா வாசு, மற்றும் பலர்.

இயக்கம் – பிரித்திவி ஆதித்யா.

ஒளிப்பதிவு – பிரவீன் குமார்.

படத்தொகுப்பு – ராகுல்

இசை –மேஸ்ட்ரோ இளையராஜா.

தயாரிப்பு – பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்.

ரேட்டிங் – 3 25 /5

இயக்குனர் சாமி இயக்கத்தில் மிருகம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு நடிகர் ஆதி கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன்பின் அய்யனார், ஆடு புலி, யாகாவாராயினும் நாகாக்க, அரவான், ஈரம், மரகத நாணயம் என பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்.

நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கையை விட நல்ல கதையிலும் தனது கதாபாத்திரத்தின் கவனம் செலுத்தி வருபவர் நடிகர் ஆதி.

பல வருட இடைவெளிக்கு பின் நடிகர் ஆதி கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கிளாப்.

புதுமுக இயக்குனர் பிரித்திவி ஆதித்யா இயக்கவிருக்கும் கிளாப் திரைப்படம் ரசிகர்களுக்கு மன நிறைவைத் தரும் நல்ல திரைப்படமாகவும் மன நிறைவான திரைப்படமாகவும் இருக்கும்.

திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே கதாநாயகன் ஆதியின் தந்தை பிரகாஷ்ராஜ் உடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது.

நடந்த அந்த விபத்தில் கதாநாயகன் ஆதியின் வலது காலை இழந்து விடுகிறார்.

நடந்த விபத்தில் கதாநாயகன் ஆதியின் தந்தை பிரகாஷ் ராஜ் இறந்து விடுகிறார்.

ஓட்டப்பந்தயம் வீரரான கதாநாயகன் ஆதியால் தனது காலை இழந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்..

இதனால் கதாநாயகன் ஆதி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு தன்னால் ஓட்டப்பந்தய வீரனாக ஆக முடியாமல் போனதே, தனது கனவு வீணானதே என்று தினம் தினம் அதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

கதாநாயகன் ஆதி காதலித்த பெண்னையை கதாநாயகி அகான்ஷா சிங்கை திருமணம் செய்து கொண்டு தனது நிலைமை எப்படி இருக்கிறது என்று சில வருடங்களாகவே  காதலித்த திருமணம் செய்த மனைவியிடம் நான்கு வருடங்களாக பேசாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அத்திலெட்டி விளையாட்டு கிளப்பின் பிரசிடன்ட் ஆக நடிகர் நாசர் (வெங்கட்ராமன்) என்ற  உயர் ஜாதிக்காரர் ஆக நடித்திருக்கிறார்.

கிராமத்தில் இருந்து வரும் கீழ் ஜாதியை சேர்ந்த மற்றொரு கதாநாயகியான கிரிஷா குருப்பை நிராகரிக்கிறார்.

மற்றொரு கதாநாயகியான கிரிஷா குருப்பிடம்  நல்லதொரு திறமை இருந்தும் அவர் நிராகரிக்கப்படுகிறார்.

400 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் மாநில அளவில் சாதனை நிகழ்த்திய மற்றொரு கதாநாயகியான கிரிஷா குருப்பை தேசிய அளவிலான ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் இருப்பது கதாநாயகன்
ஆதிக்குத் தெரிய வருகிறது.

தன்னால் செய்ய முடியாமல் போன ஓட்டப்பந்தய சாதனையை மற்றொரு கதாநாயகியான கிரிஷா குருப்பை  வைத்து நிறைவேற்ற முடிவு செய்கிறார் கதாநாயகன் ஆதி.

தன்னால் முடியாத, லட்சியத்தையும் யாரும் யாராலும் இழந்துவிடக் கூடாது.

மற்றொரு கதாநாயகியான கிரிஷா குருப்பை என்ற பெண்ணை அவள் கண்ட கனவையும் லட்சியத்தையும் தன் நாட்டிற்கு தங்கம் வெல்ல வைப்பதே கதாநாயகனின் ஆதியின் நோக்கம்.

மற்றொரு கதாநாயகியான கிரிஷா குருப்பை அவளுடைய ஊருக்கு
சென்று அவரது வீட்டாரை சரி கட்டி (பாக்ய லட்சுமி) அழைத்து வந்து, ஒட்டப் பந்தயத்துக்கு தங்கம் வெல்வதற்கு தயார் செய்ய முயல்கிறார்.

அத்திலெட்டி
விளையாட்டு கிளப்பின் பிரசிடன்ட் ஆக இருக்கும் நாசர் கதாநாயகன் ஆதி எடுக்கும் முடிவிற்கு முட்டுக்கட்டை போடுகிறார் நாசர்.

எந்த பயிற்சியாளரும் (பாக்ய லட்சுமி) மற்றொரு கதாநாயகியான கிரிஷா குருப்பிற்க்கு பயற்சி தரக்கூடாது என்று உத்தரவிடுகிறார்.

கதாநாயகன் ஆதியே மற்றொரு கதாநாயகியான கிரிஷா குருப்பை (பாக்ய லட்சுமி) பயிற்சி தர ஆரம்பிக்கிறார்.

இறுதியில் கதாநாயகன் ஆதி தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா ? இல்லையா ? மற்றொரு கதாநாயகியான கிரிஷா குருப் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றாரா? இல்லையா? கதாநாயகன் ஆதியின் கனவு நிறைவேறியதா ? இல்லையா? என்பதுதான் இந்த கிளாப் திரைப்படத்தின் மீதி கதை

இந்தக் கிளாப் திரைப்படத்தில் கதாநாயகனாக ஆதி நடித்திருக்கிறார்.

ஒற்றைக் காலை இழந்து ஊனமுற்ற இளைஞராக மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த ப்ளாக் திரைப்படத்தில் கதாநாயகியாக ஆகான்ஷா சிங் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் அவருக்கு அதிகமான வசனங்கள் இல்லை வசனங்கள் இல்லாமலேயே மிக அருமையாக நடித்து கொடுத்திருக்கிறார்.

மற்றொரு கதாநாயகியான கிரிஷா குருப் ஓட்டப்பந்தய வீரராக நடித்திருக்கிறார்.

ஏற்கனவே கோலிசோடா 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

உண்மையில் ஓட்டப்பந்தய வீரராக பல பயிற்சிகளை எடுத்து அப்படியே ஓட்டப்பந்தய வீரர்கள் ஆக நடித்திருக்கிறார்.

பிரகாஷ் ராஜ் அவர்கள் கதாநாயகன் ஆதியின் தந்தையாக வந்து பயிற்சி கொடுக்கும் காட்சிகள் அனைத்துமே மிகவும் அருமையாக உள்ளது.

ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார் பிரகாஷ்ராஜ்.

கதாநாயகன் ஆதிக்கு நண்பராக முனீஷ்காந்த் அவர்கள் மிகவும் அருமையாக கொடுத்த கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்கள்.

மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் இந்தக் கதைக்கு ஏற்ற முகங்களாக தேர்ந்தெடுத்து மிக அருமையாக கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

இநத திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறாராம்

பாடலும் பின்னணி இசையும் இளையராஜா இசையமைத்தார் என்பது போல் தெரியவில்லையே.?

இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையிலும் பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

பிரவீண் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

குறிப்பாக ஒட்டப் பந்தயத்தின் போது நாமும் ஒடுவது போலவே அமைந்திருப்பது வெகு சிறப்பு.

அனைத்து துறைகளிலும் ஊழல் இருக்கிறது அந்த ஊழல் விளையாட்டுத் துறையையும் விட்டு வைக்க வில்லை என்பதை மிக அழகாகவும்,  ஆணித் தரமாகவும் திரைப்படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் பிரித்வி ஆதித்யாவிற்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் “கிளாப்” திரைப்படம் முயற்சி திருவினையாக்கும்.