அஷ்ட கர்மா திரை விமர்சனம் ரேட்டிங் – 2.25 /5

நடிகர் நடிகைகள் – சி.எஸ்.கிஷன், ஸ்ரீதா சிவதாஸ், நந்தினி ராய், பிரியதர்ஷினி ராஜ்குமார், பின்னர் ராமச்சந்திரன், மற்றும் பலர்.
இயக்கம் – விஜய் தமிழ்செல்வன்..
ஒளிப்பதிவு – ஆர்.பி. குரு தேவ்..
படத்தொகுப்பு – மணி குமரன்.
இசை – எல்.வி. முத்து கணேஷ்.
தயாரிப்பு – மிஷ்ரி எண்டர்பிரைசஸ்.
ரேட்டிங் – 2.25 /5
அமானுஷ்ய அதிர்வலை, செய்வினை சதிவலை என கலந்துகட்டிய திகில் திரில் காம்போவாக ‘அஷ்டகர்மா.’
பேய், பிசாசு, ஏவல், பில்லி சூனியம் என்பதெல்லாம் மூடநம்பிக்கை என்று சொல்லிக் கொண்டிருக்கிற அறிவியல் அறிவாளிகள் ஒரு பக்கம் இருக்கிறார்கள்.
பில்லி சூனியத்தை ஏவி விடுதல் குட்டிசாத்தான் ஏவி விடுதல் செய்வினை வைத்தல், வைத்ததை எடுத்தல் பேய் ஓட்டுதல், என்றிருக்கும் சாமியார்கள், மந்திர தந்திர தெரிந்த மாயாஜாலக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள்.
இதெல்லாம் செய்து கொண்டிருக்கும் மந்திர வாதிகள் ஒரு பக்கம் ஜோதிடர்கள் ஒருபக்கம் மாந்திரீகம் தெரிந்தவர்கள் ஒரு பக்கம் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
மனதத்துவ மருத்துவர் கதாநாயகன் கிஷனுக்கு பேய், ஆவிகள் மீது நம்பிக்கை கிடையாது.
இவர் கனவு தொல்லையால் பாதிக்கப்படும் கதாநாயகி ஸ்ரீதா சிவதாஸுக்கு சிகிச்சைக்கு மனதத்துவ மருத்துவர் கதாநாயகன் கிஷனிடம வருகிறார்.
அவரிடம் சிகிச்சைக்கு வரும் கதாநாயகி ஸ்ரீதா சிவதாஸ் தனக்கு நடக்கும் பிரச்னைகள் பற்றி கூற அவரை இப்னாடிஸம் செய்து சிகிச்சை அளிக்கிறார்.
ஆனால் கதாநாயகி ஸ்ரீதா சிவதாஸுக்கு சிகிச்சையில் திருப்தி அடையாமல் வெளியேறுகிறார்
இந்நிலையில், பேய் இருக்கா இல்லையா என்ற டி.வி. ஷோவில் கலந்துக் கொள்கிறார் கதாநாயகன் கிஷன்.
டிவி ஷோவில் பங்கேற்கும் கதாநாயகன் கிஷன் எதிர் தரப்பில் உள்ள மந்திரவாதிகள் கூறும் பேய் கதைகளை கதாநாயகன் கிஷன் நம்ப மறுக்கிறார்.
அப்போது பேய் இல்லை என்று கூறும் கதாநாயகன் கிஷனை.
கதாநாயகன் கிஷனை
மந்திரவாதி ஒருவர் நான் கூறும் பங்களாவில் உங்களால் தங்க முடியுமா என கேட்கிறார்.
முடியும் என்று கூறி சவாலை ஏற்று கொண்டு அந்த பங்களாவில் தங்குவதாக கூறி மந்திரவாதி கூறிய சவாலை ஏற்கிறார்.
அந்த பங்களா தன்னிடம் சிகிச்சைக்கு வந்த கதாநாயகி ஸ்ரீதா சிவதாஸுக்கு சொந்தமானது.
பின்னர்தான் அந்த பங்களாவில் உள்ள குடும்பத்துக்கு யாரோ செய்வினை செய்த விவகாரம் கதாநாயகன் கிஷனுக்கு தெரியவருகிறது.
அதிலிருந்து குறிப்பிட்ட குடும்பத்தை காப்பாற்ற கதாநாயகன் கிஷன் முயற்சி எடுக்கிறார்.
பேய் இருப்பதாக கூறப்படும் அந்த பங்களாவிறக்கு செல்லும் கதாநாயகன் கிஷனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இறுதியில் பேய் இருக்கும் வீட்டில் கதாநாயகன் கிஷன் தங்கினாரா? கதாநாயகன் கிஷனுக்கு அனுமதி மறுக்க காரணம் என்ன? என்பதுதான் இநத அஷ்ட கர்மா திரைப்படத்தின் மீதிக்கதை.
புதுமுக கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் சி.எஸ்.கிஷன் இந்த அஷ்ட கர்மா திரைப்படத்தையும் தயரித்திருக்கிறார்.
கதாநாயகன் என்பதால் தானே சீனுக்கு சீன் அவரே வராமல் மற்றவர்களுக்கும் நடிக்க நிறைய இடம் கொடுத்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் கிஷன், கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் என்ற அந்தஸ்து இல்லாமல் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
கதாநாயகன் கிஷனுக்கு உதவியாளராக வரும் கதாநாயகி நந்தினி ராய், பதட்டமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
மற்றொரு கதாநாயகியாக வரும் ஸ்ரீதா சிவதாஸ், பல இடங்களில் நடிப்பில் அதிகமாக ஸ்கோர் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
பில்லி, ஏவல், சூனியம், செய்வினை வைப்பதை மையமாக கதையை வைத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் தமிழ்செல்வன்.
திகில் திரைப்படங்களுக்கு உண்டான திரைக்கதை ஓரளவிற்கு இருந்தாலும், இது பேய் படமா… மந்திரவாதி படமா… என்ற குழப்பம் ஏற்படுகிறது.
கதாநாயகனுக்கு முக்கியத்துவம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தது சிறப்பு.
புது இயக்குனர் விஜய் தமிழ் செல்வன் திகில் கலந்து சுவராஸ்யமாக திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இசையமைப்பாளர் எல்.வி. முத்துகணேஷ் இசையில் ஒரேயொரு புரமோ பாடல் மட்டுமே திரைப்படத்திற்காக உருவாக்கி இருக்கிறார்கள்.
டி.ராஜேந்தர் பாடிய அந்த பாடல் தாளம் போட வைக்கிறது.
பின்னணி இசையில் ரசிகர்களை பயமுறுத்த முயற்சி செய்திருக்கிறார்.
எல்.வி.முத்துகணேஷ் இசையும் திரைப்படத்துக்கு துணை நிற்கிறது.
ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு மிகவும் அருமை.
ஆனால், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல் திரைக்கதையிலும் அதிக கவனம் செலுத்தி இருந்தால் திரைப்படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘அஷ்டகர்மா’ திரைப்படம் மிரட்டல் இல்லாத பேய் படம்.











