வலிமை திரை விமர்சனம் ரேட்டிங் 3 / 5

நடிகர் நடிகைகள் – அஜித்குமார், கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமதிரா, அச்சுத குமார், உமா, ராஜ் ஐயப்பா, செல்வா, ஜி எம் சுந்தர், பாவேல் நவகீதன், தினேஷ் பிரபாகர், பானி ஜெ, துருவன், அஜித் நம்பியார், . சைத்ரா ரெட்டி, பேர்லி மானே, டி ஆர் கே கிரண், புகழ், அகத்தியன், ஜானகி சுரேஷ், வைஷ்ணவி, சுனேனா, சிலுமிஷம் சிவா, மற்றும் பலர்.
இயக்கம் – எச் வினோத்.
ஒளிப்பதிவு – நீரவ் ஷா..
படத்தொகுப்பு – விஜய் வேலு குட்டி.
இசை – யுவன் சங்கர் ராஜா.
தயாரிப்பு – ஜீ ஸ்டுடியோஸ்.
ரேட்டிங் – 3 /5
தமிழ் திரைப்பட உலகில் பல காலங்களில் பல விதமாக சொல்லப்பட்ட பல திரைப்படங்களில் வந்த ஒரு கதையைத்தான் இயக்குனர் எச் வினோத் இந்த வலிமை எனற பெயரில் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.
இதைப்போல் தமிழ் திரைப்பட உலகில் எவ்வளவோ கதைகள் வந்திருக்கிறது.
மதுரையில் காவல் துறை அதிகாரியாக இருக்கும் கதாநாயகன் அஜித்குமார், தாய, அண்ணன், தம்பி, அக்கா என்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
கொலம்பியாவிலிருந்து கடல் வழியாக போதைப் பொருளை ஒரு கும்பல் வழக்கமாகக் கடத்துகிறது.
கொலம்பியாவில் இருந்து பாண்டிச்சேரிக்கு போதைப் பொருட்கள் வருகிறது.
பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு போதைப் பொருட்கள் எடுத்து செல்லும் போது, பைக்கில் வரும் மர்ம நபர்கள் போதைப் பொருட்கள் கடத்துகிறார்கள்.
அவர்களிடமிருந்து போதைப் பொருளைக் கொள்ளையடித்து இங்கு இளைஞர்கள் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு விற்கும் வில்லன் கார்த்திகேயா.
வெறும் போதைப் பொருளை மட்டும் கடத்தாமல், செயின் பறிப்பு, ஆட்கள் கொலை என்று ‘டார்க் வெப்’ மூலம் செய்கிறது வில்லன் கார்த்திகேயா தலைமையிலான கும்பல்.
இந்நிலையில் மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்றம் செய்யப்படுகிறார் கதாநாயகன் அஜித்குமார்.
சென்னைக்குப் புதிதாக பொறுப்பேற்கும் உயர் காவல் துறை அதிகாரியாக
கதாநாயகன் அஜித்குமார். அந்த போதைப்பொருட்கள்
கடத்த கும்பலை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் கதாநாயகன் அஜித் குமார்.
திடீரென ஒருநாள் மேன்சனில் தற்கொலை செய்த நபரை பற்றி விசாரிக்க காதலிக்க ஆரம்பிக்க பலவிதமான விஷயங்கள் தெரிய வருகிறது.
அப்போது அந்த தற்கொலையின் பின்னணியில் கொலை, கொள்ளை, போதை பொருட்கள் கடத்தலில் பைக் கேங் தலைவன் கார்த்திகேயா ஈடுபடுவதை கண்டுபிடிக்கிறார் கதாநாயகன் அஜித்குமார்.
இறுதியில் பைக் கேங் கும்பலின் தலைவன் கார்த்திகேயாவை கதாநாயகன் அஜித்குமார் கைது செய்தாரா? இல்லையா? என்பதுதான் இந்த வலிமை திரைப்படத்தின் மீதிக்கதை.
இநத வலிமை திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார் கதாநாயகன் அஜித்குமார்.
ஆக்சன், காமெடி, சென்டிமென்ட், நடனம் என அனைத்திலும் திறமையான நடிப்பை மிக அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் கதாநாயகன் அஜித்குமார்.
குறிப்பாக பைக் சேசிங் ஆக்சன் காட்சியில் மிரள வைத்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயா கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
இவரது உடல் அமைப்பு சிக்ஸ் பேக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.
திரைப்படத்தின் கதாநாயகி என்று சொல்ல முடியாத ஒரு கதாபாத்திரத்தில் ஹுமா குரேஷி நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக வரும் ஹுமா குரேஷி, ஆக்சனில் மாஸ் காண்பித்திருக்கிறார்.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் ஒரு முக்கிய அதிகாரியாக கதாநாயகி ஹுமா குரேஷி.
ஆரம்பத்தில் ஒரே ஒரு காட்சியில் கதாநாயகன் அஜித்குமாரிடம் என்னை ‘கட்டிக் கொள்வதுதானே’ எனக் கேட்கிறார்.
நல்ல வேளையாக தெலுங்கு திரைப்படங்களில் பார்த்தால் பாட்டு பேசினால் பாட்டு சிரித்தாள் பாட்டு போல அங்கு இந்த திரைப்படத்தில் பாட்டு போடவில்லை.
இவரும் கதாநாயகன் அஜித்குமாரும் கதாநாயகி ஹுமா குரேஷி.
காதலர்களா என்ற விளக்கத்திற்கெல்லாம் போகவேயில்லை இயக்குனர் எச் வினோத்.
போலீஸ் உயர் காவல்துறை அதிகாரிகளாக வரும் செல்வா, ஜி.எம்.சுந்தர், தினேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
போதைப்பொருள், பைக் கொள்ளையர்களை மையமாக வைத்து கிரைம் திரில்லர் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் எச் வினோத்.
விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து ரசிகர்களை கட்டி போட்டு இருக்கிறார் இயக்குனர் எச் வினோத்.
பைக் சாகசங்கள் அனைத்து ரசிக்கும்படி உள்ளது.
கிரைம் திரில்லர் மட்டுமில்லாமல், அம்மா மகன், அண்ணன் தம்பி பாசம் என அனைத்து ரசிகர்களும் கவரும் விதத்தில் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.
ஒரு காட்சியில் கதாநாயகன் அஜித்குமாரின் அண்ணன் தண்ணீர் அடிக்கும் போது ஐயப்பனுக்கு மாலை போட்டு இருக்கும் அவர் பால் குடிப்பது போல் கிளாஸில் ஊற்றி மாலையை கழட்டி விட்டு தண்ணி அடிக்கிறார்.
தேவை இல்லாமல் காமெடி என்ற பெயரில் கடவுள் ஐயப்பனை கேவலப்படுத்தி இருக்கிறார்.
வில்லன் கார்த்திகேயா ஒரு காட்சியில் தமிழ்நாடு காவல்துறை என் மயிரை கூட புடுங்க முடியாது என்ற வசனம் தமிழக காவல்துறையை இழிவுபடுத்துவதாக இருக்கிறது.
காமெடி காட்சி என்ற பெயரில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சாகடித்து விட்டார் வினோத்
இசையமைப்பாளர் இளம் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜா இசையில் வேற மாறி பாடல் ஆடவும், அம்மா பாடல் உருகவும் வைத்திருக்கிறது.
பின்னணி இசையில் அதிக வலிமையுடன் செய்திருக்கிறார்.
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் திரைப்படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘வலிமை’ திரைப்படம் வலிமை இல்லாத வலிமை.











