அல் ஷிபா சிகிச்சையகத்தின் மகளிர் தின சிறப்பு சீனக் கண்ணாடி கோப்பை சிகிச்சை ( Hijiama Therapy / Cupping )
சென்னை 08 மார்ச் 2022
அல் ஷிபா சிகிச்சையகத்தின் மகளிர் தின சிறப்பு சீனக் கண்ணாடி கோப்பை சிகிச்சை ( Hijiama Therapy / Cupping )
இன்று மார்ச் 8 2022 ஆம் தேதி காலை மகளிர் தினத்தை முன்னிட்டு அல் ஷிபா சிகிச்சையகம் சென்னையில் உள்ள தனது கிளையில் நூறு பெண்களுக்கு சிறப்பு Cupping சிகிச்சை வழங்க முடிவு செய்துள்ளது .
மேலும் இந்த நிகழ்ச்சி கீழ்க்கண்ட முகவரியில் காலை பத்து மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாபெரும் நிகழ்வை முனைவர் பாராளுமன்ற உறுப்பினர் உயர் திரு . திருமாவளவன் நிறுவனத் தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையேற்க வழக்கிறஞர் திருமதி எழில் கரோலின், தலைவர் முனைவர் அம்பேத்கர் பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு துவங்கி வைக்கிறார்.
பெண்கள் மேம்பாடை வலியுறுத்துவது இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும் .
தொழில்துறை வல்லுனர்கள் மற்றும் சிறந்த பணியாளர்களை நியமித்து அல் ஷிபா Cupping சிகிச்சை நிறுவனத்தின் நிறுவனர் மருத்துவர் MA Fenazir அவர்கள் 100 பெண்களை இந்நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
அல்ஷிபா Cupping சிகிச்சை நிறுவனம் பற்றி சில வரிகள்
2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அல்ஷிபா நிறுவனம் பிரத்யேகமான Cupping சிகிச்சையில் தொழில் முறையில் சிறந்த பயிற்சி மற்றும் பட்டயம் பெற்ற பணியாளர்களைக் கொண்ட கைதேர்ந்த நிறுவனமாகும் எங்கள் பணியாளர்கள், ஊழியர்கள் சிறப்பான மற்றும் Cupping சிகிச்சை தொடர்பான பல்வேறு வகையான தனித் திறன்களில் சிறந்த பயிற்சிப் பெற்றவர்களாவர்.
சிறந்த அனுபவமிக்கப்பணியாளர்களின் துணை கொண்டு உலகத்தரத்திலான Cupping சிகிச்சை மற்றும் அது தொடர்பான பல்வகை சேவைகளை வழங்குகிறோம்.
மேலும் சிகை , முக பராமாரிப்பு மற்றும் உடல் நலம் தொடர்பான சேவையில் இருபது வருடங்கள் அனுபவம் பெற்ற முண்ணனி நிறுவனமான எங்களின் நிறுவனத்துக்கு உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
தொழில்நுட்பம் புதிய கண்டுபிடிப்புகள், சிறந்த சேவை ஆகியவற்றின் துணை கொண்டு மக்களின் உடல்நலம் பேணுவது நல்வாழ்வு தொடர சேவை அளிப்பதே எங்கள் நிறுவனத்தின் தலையாய குறிக்கோள்.
அல்ஷிபா சிகிச்சையகத்தின் நிறுவனர் மருத்துவர் MA Fenazir அவர்கள் குறித்து சில வரிகள்.
மருத்தவர் MA Fenazir தன்னுடைய முதுகலை பட்டப்படிப்பின் போது பாடத்திட்டத்தில் ஒரு பாடமாக இருந்த Cupping சிகிச்சை முறை மற்றும் அந்த சிகிச்சையின் முடிவுகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் Cupping சிகிச்சை குறித்த மேற்படிப்பினை மேற்கொள்ள முடிவெடுத்து அந்த துறையில் ஆய்வுகள் மேற்கொண்டு சிறந்த வல்லுநராகவும் தேர்ச்சி பெற்றவர்.
மேலும் அவர் அழகியல் மற்றும் சரும பராமரிப்பு நிறுவனத்தின் தேர்ச்சிப் பெற்ற உறுப்பினர் அவர் Hijiama சிகிச்சையில் முதுகலை பட்டம் பெற்ற பதிவுத் தேர்ச்சி பெற்ற ஒரு Cupping சிகிச்சை நிபுணரும் சர்வதேச Cupping சிகிச்சை சங்கத்தின் உறுப்பினருமாவார்.
சரும பராமரிப்பு தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள வரும் மக்களுக்கு ( நோயாளிகளுக்கு ) இயற்கையான சிகிச்சை முறைகள் மூலம் சிறந்த சேவை வழங்க வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டவர்.
அவர் எப்போதும் கூறுவது மற்றும் நிறுவனத்தின் நோக்கமாக கொண்டது ” எங்கள் பெயரை எங்கள் கனவு ” ( Our name is our mission ) . இதுவரை இத்தகைய பிரத்யேக Cupping சிகிச்சையை மேற்கொள்ள வந்து பலன் பெற்ற மக்களை எண்ணி அவர் பெருமிதம் கொள்வதோடு நில்லாமல் மேலும் இது தொடர வேண்டும் மக்களுக்கு சிறந்த சேவை வழங்க முடியும் என உறுதியாக உள்ளார்.











