பிரபல நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
சென்னை 28 நவம்பர் 2021
பிரபல நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
தமிழ் தெலுங்கில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர்.
‘திருடா திருடி’, ‘மகதீரா’, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
‘மகதீரா’ படத்தில் ஒரு பாடலுக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
இது தவிர ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தில்லுக்கு துட்டு’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடன இயக்குனர் சிவசங்கருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடன இயக்குனர் சிவசங்கருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
நடன இயக்குனர்
சிவசங்கருடன் அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடன இயக்குனர் சிவசங்கரின் உடல்நிலை மேலும் மிகவும் மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
நடன இயக்குனர் சிவசங்கரின் சிகிச்சைக்கு சோனு சூட், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் உதவ முன்வந்தனர்.
கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் இன்று இரவு 7.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார்.
அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் .
அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/SonuSood/status/1464971618707378184?t=ITGbdJPjRCIqh9EedBe7bQ&s=19











