நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் நாளை காலை திரைப்படத்தின் பூஜையுடன் ஆரம்பம்.!!
சென்னை 20 ஆகஸ்ட் 2022 நடிகர் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் நாளை காலை திரைப்படத்தின் பூஜையுடன் ஆரம்பம்.!!
நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா கடைசியாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார்.
அந்த திரைப்படத்தில் இரண்டு கட்டமாக படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இயக்குனர் சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்துள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்க உள்ளார் நடிகர் சூர்யா.
மிக் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இந்த திரைப்படத்தை யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடீயோ க்ரீன் இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த திரைப்படம் பீரியட் திரைப்படமாக இரு பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தற்போது திரைப்படத்தின் பூஜை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாளை காலை 7 மணிக்கு திரைப்படத்தின் பூஜை ஆரம்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமாபுரத்தில் உள்ள அகரம் பவுண்டேஷன் அலுவலகத்தில் வைத்து பூஜை நடைபெறற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
மாயாவி, ஆறு, சிங்கம் 1, சிங்கம் 2 ஆகிய திரைப்படங்களை அடுத்து ஐந்தாவது முறையாக தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் சூர்யா திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
பாலிவுட் நடிகை திஷா பதானி இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.











