இந்திய அளவில் நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் நடிகர் விஜய் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் நடிகை சமந்தா இடம் பிடித்துள்ளார்.
சென்னை 20 ஆகஸ்ட் 2022 இந்திய அளவில் நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் நடிகர் விஜய் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் நடிகை சமந்தா இடம் பிடித்துள்ளார்!!
ஆர்மேக்ஸ் மீடியா வெளியிட்டுள்ள இந்தியாவிலேயே பாப்புலரான ஆண் நடிகர்கள் பட்டியலில் தொடர்ந்து இந்த மாதமும் நடிகர் தளபதி விஜய்தான் முதலிடம் பிடித்துள்ளார்.
ஆர்மேக்ஸ் மீடியா சமீபத்தில் தமிழ் திரைப்பட உலகில் பாப்புலரான நடிகர்கள் பட்டியலை வெளியிட்டது அதிலும் நடிகர் தளபதி விஜய்தான் முதலிடம் உள்ளார்.
ஆனால் அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த நடிகர் அஜித்குமாருக்கு இந்தியளவிலான பட்டியலில் 10வது இடம் கிடைத்துள்ளது.
ஆர்மேக்ஸ் மீடியா எனும் தனியார் நிறுவனம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் பாப்புலரான நடிகர்கள், நடிகைகள், திரைப்படங்கள், ஓடிடி வெப்சீரிஸ்கள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு வருகிறது.
ஜூலை மாதத்திற்கான பாப்புலர் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்தியா அளவில் நடிகைகள் பட்டியலில் நடிகை சமந்தாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
இரண்டாவது இடத்தில் ஆலியா பட், மூன்றாவது இடத்தில் நடிகை நயன்தாராவும் இருக்கிறார்கள்.
சமீபத்தில் காபி வித் கரண் சீசன் 7ல் கூட ஆர்மேக்ஸ் மீடியா பட்டியல் பற்றி பேசி கரண் ஜோஹர் நயன்தாரா ரசிகர்களிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.
இந்த பட்டியலில் தமிழ் திரைப்பட உலகமாக இருக்கட்டும் அல்லது ஒட்டுமொத்த இந்திய திரைப்படத்துறையாக இருக்கட்டும் நடிகர் தளபதி விஜய் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.
மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இதற்காக சண்டை போடுவதும், காசு வாங்கிக் கொண்டுதான் இந்த ஆர்மேக்ஸ் நிறுவனம் இப்படி பட்டியலை வெளியிடுகிறது என்றும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்து வருகின்றனர்.
இந்திய அளவில் உள்ள நடிகர்கள் பட்டியல்.
முதல் இடத்தில் நடிகர் தளபதி விஜய், இரண்டாவது இடத்தில் பிரபாஸ், மூன்றாவது இடத்தில் ஜூனியர் என்டிஆர், நான்காவது இடத்தில் அல்லு அர்ஜுன், ஐந்தாவது இடத்தில் யஷ், ஆறாவது இடத்தில் ராம்சரண், ஏழாவது இடத்தில் அக்ஷய் குமார், எட்டாவது இடத்தில் மகேஷ் பாபு, ஒன்பதாவது இடத்தில் சூர்யா, பத்தாவது இடத்தில் அஜித்குமார் உள்ளனர்.
இந்திய அளவில் உள்ள நடிகைகள் பட்டியல்.
முதல் இடத்தில் நடிகை சமந்தா, இரண்டாவது இடத்தில் ஆலியா பட், மூன்றாவது இடத்தில் நயன்தாரா, நான்காவது இடத்தில் காஜல் அகர்வால் ஐந்தாவது இடத்தில் தீபிகா படுகோனே, ஆறாவது இடத்தில் கீர்த்தி சுரேஷ், ஏழாவது இடத்தில் பூஜா ஹெக்டே எட்டாவது இடத்தில் ராஷ்மிகா மந்தனா, ஒன்பதாவது இடத்தில் கத்தினா கயிப், பத்தாவது இடத்தில் கியாரா அத்வானி, உள்ளனர்.
தமிழ்நாடு அளவில் பாப்புலரான நடிகர் பட்டியலில் நடிகர் அஜித் இரண்டாவது இடத்திலும், இந்திய அளவில் நடிகர் அஜித் 10வது இடத்திலும் இந்த பட்டியலில் இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
நடிகர் தளபதி விஜய் மற்றும் அஜித்குமார் ரசிகர்கள் அந்த பதிவின் கீழ் பெரும் சண்டையை போட்டு வருகின்றனர்.
தொடர்ந்து நடிகர் தளபதி விஜய்யை மட்டும் ஆர்மேக்ஸ் மீடியா முதலிடத்தில் வைத்திருப்பது ஏன் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
பாலிவுட் நடிகர்களில் அக்ஷய் குமார் மட்டுமே இருப்பதும் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
Ormax Stars India Loves: Most popular male film stars in India (July 2022) #OrmaxSIL pic.twitter.com/XXxPO3RZeT
— Ormax Media (@OrmaxMedia) August 20, 2022
Ormax Stars India Loves: Most popular female film stars in India (July 2022) #OrmaxSIL pic.twitter.com/LYgaNxOMMq
— Ormax Media (@OrmaxMedia) August 20, 2022











