நடிகர் நானியின் உருவாகி வரும் ‘தசரா’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும்!!

சென்னை 25 ஆகஸ்ட் 2022 நடிகர் நானியின் உருவாகி வரும் ‘தசரா’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும்!!

தெலுங்கு திரைப்பட நேச்சுரல் ஸ்டார் நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் ‘தசரா’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியா திரைப்பட உலகில் புகழ்பெற்ற நடிகராக மாறி வருகிறார் நேச்சுரல் ஸ்டார் நடிகர் நானி.

அவர் நடிப்பில் வெளியான ‘ஷ்யாம் சிங்கா ராய்’, ‘அன்டே சுந்தரானிகி’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வகையில் நேச்சுரல் ஸ்டார் நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தசரா’.

மிக வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கி வருகிறார்.

எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது.

இந்த திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தென்னிந்தியாவில் இருபெரும் கதாநாயகிகள் இந்த திரைப்படத்தில் நடிப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு சத்யன் சூரியன் இசையமைத்து வருகிறார்.

ஏற்கனவே இந்த திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது என்ன மாதிரியான அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

error: Content is protected !!