நடிகர் நரேனுக்கு 14 வயதில் மகள் உள்ள நிலையில் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.!!!

சென்னை 26 ஆகஸ்ட் 2022 நடிகர் நரேனுக்கு 14 வயதில் மகள் உள்ள நிலையில் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.!!!

நடிகர் நரேனுக்கு ஏற்கனவே, ஒரு 14 வயதில் தன்மையா என்கிற மகள் உள்ள நிலையில், 15 ஆவது திருமண நாளில் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார் நடிகர் நரேன்.

நடிகர் நரேன் ‘நிழல்குத்து’ என்கிற மலையாள திரைப்படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பட வாழ்க்கை பயணத்தை துவங்கியவர்.

இவர் நடித்து வெளியான ‘4 தி பீப்பிள்’ என்கிற திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெறவே, தமிழ் மற்றும் தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியானது.

திரையுலகில் நடிக்க துவங்கிய காலத்தில், மலையாளத்தில் கதாநாயகனாக நடிக்கவில்லை என்றாலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார்

அப்படி தான் இவரது நடிப்பு இயக்குனர் மிஷ்கின் கண்ணில் பட்டதால் தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தின் மூலம் இவரை கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.

இவரது முதல் திரைப்படமே தமிழில் மிகப்பெரிய வெற்றி பெறவே அடுத்தடுத்து தமிழில் இவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.

இவர் தமிழில் அடுத்தடுத்து தேர்வு செய்து நடித்த ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘பள்ளிக்கூடம்’, ‘அஞ்சாதே’ போன்ற படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று இவருக்கான நல்ல மதிப்பை கூட்டியது.

error: Content is protected !!