சின்ன கலைவாணர் நடிகர் விவேக் இறப்பு ரகசியத்தை உடைத்த அவருடைய சகோதரி.!
சென்னை 17 செப்டம்பர் 2022 சின்ன கலைவாணர் நடிகர் விவேக் இறப்பு ரகசியத்தை உடைத்த அவருடைய சகோதரி.!
கொரோனா வைரஸ் நோய் அதிகரித்த காலகட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகர் சின்ன கலைவாணர் விவேக்கின் திடீர் இறப்பு அப்பொழுது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
நடிகர் சின்ன கலைவாணர் விவேக்கின் இறப்புக்கு பல விதமான காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையான காரணம் அறியப்படாமலே இருந்து வந்தது.
சின்ன கலைவாணர் விவேக் தமிழ் திரைப்பட உலகில் அசைக்க முடியாத ஒரு அங்கமாகவே இருந்து வந்தவர் என அனைவரும் அறிந்ததே.
காமெடி கதாபாத்திரத்திரங்களில மட்டுமல்லாமல் அதில் சில சமூக கருத்துக்களையும் சொல்லி வந்தவர்.
தனது சொந்த வாழ்க்கையிலும் சமூகத்திற்கு தேவையானவைகளை செய்து வந்தார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் அதிகரித்து வந்தது.
அப்பொழுது கொரோனா வைரஸ் நோயை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பூசி கண்டு மக்கள் பலரும் பயந்தனர்.
இதை சரிப்படுத்த சின்ன கலைவாணர் விவேக் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக
பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
ஆனால் துரதிஷ்டவசமாக அவர் அடுத்த சில தினங்களில் காலமானார்.
அது தமிழகத்திலும் திரை உலகத்திலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அவருக்கு குடிப்பழக்கம், கொலஸ்ட்ரால் என பல விதமான காரணங்கள் கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அவருடைய சசோதரி எனது தம்பி இறப்பு குறித்தும் அவரின் பழக்கவழக்கங்கள் குறித்து பேசி இருக்கிறார்.
அவன் கடவுள் கொடுத்த உடலை அவரிடம் அப்படியே நோய் இல்லாமல் ஒப்படைக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டே இருப்பான்.
அவனுக்கு எந்தவிதமான நோயும் இல்லை.
சீரான இடைவேளையில் உடல் பரிசோதனை செய்து கொள்வான்.
2015க்கு பிறகு அசைவ உணவுகள் சாப்பிடுவதில்லை.
ஏன் குறைவாக எடுத்துக்கொண்ட ஆல்கஹாலை கூட நிறுத்தி விட்டான்.
மொத்தத்தில் டி-டோட்டிலராக இருந்தான்.
அவன் எந்தவித நோயிலும் இறக்கவில்லை.
அது திடீர் கார்டியாக் அரெஸ்ட். அவனை சோதித்த மருத்துவர்கள் அவனின் முக்கிய இருதய வால்வில் பெரிய அளவிலான அடைப்பு ஒன்று இருந்ததாலே இந்த இறப்பு ஏற்பட்டதாக கூறியதாக தெரிவித்து இருக்கிறார்.
கலைவாணர் விவேக்கின் இறப்பில் பல யூகங்கள் பரவிய நிலையில் இவரின் இந்த பேட்டி தற்போது வைரலாக பரவி வருகிறது.










