உயிர் தமிழுக்கு திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- அமீர், சாந்தினி ஸ்ரீதரன், இமான் அண்ணாச்சி, ஆனந்தராஜ், ராஜ் கபூர், சரவண சக்தி, மாரி முத்து, கஞ்சா கருப்பு, வினேத் சாகர், பாவா லட்சுமணன், மாயி சுந்தர், மகாநதி சங்கர், ராஜசிம்மன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஆதம் பாவா.
ஒளிப்பதிவாளர் :- தேவராஜ்.
படத்தொகுப்பாளர் :- அசோக்.
இசையமைப்பாளர் :- வித்யாசாகர்.
தயாரிப்பு நிறுவனம் :- மூன் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர்:- ஆதம்பாவா,
தேனி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். கேபிள் டி.வி கடை நடத்தி கொண்டு ஆப்ரேட்டர் தொழில் செய்து வரும் கதாநாயகன் அமீர், ஊர் மக்களிடம் மிகவும் பரீட்சையமாக இருந்து அப்பப்போ ஊர் மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்து வருகிறார்.
மக்கள் முன்னணி கட்சி சார்பாக இமான் அண்ணாச்சிக்கு வார்டு கவுன்சிலர் பதவியில் போட்டியிடுவதற்காக கட்சியின் தலைமை அறிவிக்க கதாநாயகன் அமீரின் நண்பராகிய உதவியை நாடுகிறார்.
வார்டு கவுன்சிலர் பதவி தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கதாநாயகி சாந்தினி ஸ்ரீதரன் எதிர் கட்சிக்கு சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்யும் வரும்போது கதாநாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் அவர் மீது காதல் வயப்படுகிறார்.
அதனால் இமான் அண்ணாச்சி வழங்கப்பட்ட வார்டு கவுன்சிலர் பதவிக்கு மக்கள் முன்னணி கட்சி சார்பாக கதாநாயகன் அமீர் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
கதாநாயகி சாந்தினி ஸ்ரீதரனிடம் பேசி நெருங்கி பழக வாய்ப்பு கிடைக்கும் என நினைத்து வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார்.
மக்கள் முன்னணி கழகம் சார்பாக கதாநாயகன் அமீர் வார்டு கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் வென்று சாந்தினி ஸ்ரீதரனை காதலிக்கவும் ஆரம்பித்தார்.
ஒரு பக்கம் சாந்தினி ஸ்ரீதரன் உடனான காதலை வளர்த்துக் கொண்டு, மறுபக்கம் கதாநாயகன் அமீரின் அரசியல் வாழ்க்கையையும் வளர்ந்து வருகிறார்.
ஆனால், கதாநாயகன் அமீரின் காதலுக்கு சாந்தினி ஸ்ரீதரன் தந்தையான எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஆனந்தராஜ் முட்டுக்கடை போடுகிறார்.
இதனால், கதாநாயகன் அமீருக்கும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஆனந்தராஜுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் பகை ஏற்படுகிறது.
சென்னையில் ஒருநாள் அதிகாலையில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளரும் எம்.எல்.ஏ ஆனந்தராஜ் மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார்.
முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளரும் எம்.எல்.ஏ ஆனந்தராஜ் மகளான சாந்தினி ஸ்ரீதரன் காதலிக்கும் எதிர்க்கட்சியான புரட்சிகர மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் கதாநாயகன் அமீர்தான் தனது தந்தையை கொலை செய்தது அமீர் தான் என்று நம்புகிறார்.
கதாநாயகி சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகன் அமீரை வெறுக்க ஆரம்பிக்கிறார்.
முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளரும் எம்.எல்.ஏ ஆனந்தராஜ் கொலை பழி கதாநாயகன் அமீர் மீது விழுகிறது.
உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து கதாநாயகன் அமீர் மீது விழுந்த கொலை பழியை போக்குவதற்காக, மக்கள் முன்னணி கழகம் கட்சியின் மேலிடம் அந்த தொகுதியில் இடைத் தேர்தல் வர கதாநாயகன் அமீருக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கதாநாயகன் அமீர் நிராகரிக்கிறார்.
ஆனால், கதாநாயகன் அமீர் தான் உண்மையான குற்றவாளி என்பதை நிரூபிப்பதற்காக, முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளரும் எம்.எல்.ஏ ஆனந்தராஜ் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுக்காட்டுகிறேன், என்று கதாநாயகி சாந்தினி ஸ்ரீதரன் சபதம் எடுக்க, தன்னை நிரபராதி என்று நிரூபிக்க கதாநாயகி சாந்தினி ஸ்ரீதரன் தோற்கடிப்பதற்காக கதாநாயகன் அமீரும் இடைத்தேர்தலில் களம் இறங்குகிறார்.
இறுதியில், காதலுக்காக அரசியல் களத்தில் இறங்கிய கதாநாயகன் அமீரின் காதலும் தேர்தலும் இரண்டிலும் வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா?
என்பதுதான் இந்த உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் மீதி க்கதை.
இந்த உயிர் தமிழுக்கு திரைப்படத்தில் கதாநாயகனாக அமீர் நடித்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் பாண்டியனாக அறிமுகமாகி பிறகு மாவட்ட செயலாளராக உருவெடுக்கும் அவரது அரசியல் வாழ்க்கை மற்றும் கதாநாயகி சாந்தினி ஸ்ரீதரனுடன் காதல் வாழ்க்கை என இரண்டு விதமான தளங்களிலும் தனது முழுமையான பங்களிப்பை கொடுத்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
கதாநாயகனாக அமீர் மிக அற்புதமாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.
இந்த உயிர் தமிழுக்கு திரைப்படத்தில் கதாநாயகியாக
சாந்தினி ஸ்ரீதரன், நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை சாந்தினி ஸ்ரீதரன் நடிப்பு சிரிப்பு இரண்டிலும் சிறப்பு.
கதாநாயகன் அமீர் இமான் அண்ணாச்சி, இருவரும் அடிக்கும் லூட்டியும் காமெடியும் சத்யராஜ் கவுண்டமணி போல் இருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவராக வரும் ஆனந்தராஜ், ஆளுங்கட்சி தலைவராக வரும் ராஜ் கபூர், சரவண சக்தி, மாரி முத்து, கஞ்சா கருப்பு, வினேத் சாகர், பாவா லட்சுமணன், மாயி சுந்தர், மகாநதி சங்கர், ராஜசிம்மன்,என அனைவரும் கொடுத்த வேலையை மிக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தேவராஜ், ஒளிப்பதிவு மூலம் ரசிக்கும்படி சரியான முறையில் கையாண்டிருக்கிறார்.
இசையமைப்பாளர் வித்யாசாகரின் இசையில் பாடல்கள் முனுமுனுக்க வைக்கிறது.
இசையமைப்பாளர் வித்யாசாகரின்
பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்த இருக்கிறார்.
தமிழ் நாட்டில் உள்ள அரசியலில் நடந்த சில உன்மையான சம்பவங்களை வைத்துக்கொண்டு ஒரு அரசியல் காதல் கதையை ஜாலியாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஆதம்பாவா.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஒ.பி.எஸ் தியானம், அதே நினைவிடத்தில் சசிகலா போட்ட சபதம், ஆன்மீக அரசியல் உள்ளிட்ட பல விசயங்களை திரைக்கதையுடன் சேர்த்து ரசிக்கும்படியாகவும் சிரிக்கும் படியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ஆதமபாவா.
மொத்தத்தில், ’உயிர் தமிழுக்கு’ திரைப்படம் பழைய அரசியலாக இருந்தாலும் தற்போதைய உள்ள
அரசியலாக
ரேட்டிங் 3.5/5.











