தீராக்காதல் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 4.25./5.
நடிகர் & நடிகைகள் :- ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜித் கான், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ரோகின் வெங்கடேசன்.
ஒளிப்பதிவு :- ரவிவர்மன் நீலமேகம்.
படத்தொகுப்பு :- பிரசன்னா ஜிகே.
இசை :- சித்து குமார்.
தயாரிப்பு நிறுவனம் :- லைக்கா புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- சுபாஸ்கரன்.
ரேட்டிங் :- 4.25./ 5.
கதாநாயகன் ஜெய் தனது மனைவி ஷிவதா மற்றும் தன் செல்ல மகளுடன் குடும்பமாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
கதாநாயகன் ஜெய் ஒரு நாள் அவசரமாக தனது ஆபிஸ் வேலையாக பெங்களூருவுக்கு செல்கிறார்.
கதாநாயகன் ஜெய் எதிர்பாராத விதமாக ரயில் நிலையத்தில் தனது முன்னாள் காதலி கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷை எட்டு ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொள்கிறார்கள்
கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷும் பெங்களூருவுக்கு ஆபிஸ் விஷயமாக செல்வதால் இருவரும் ஒன்றாக பயணிக்கின்றனர்.
பழைய தங்களது காதல் நினைவுகளை பகிர்ந்து கொண்டு இருவரும் தங்களுடைய செல்போன் எண்ணை பரிமாறிக் கொள்கின்றனர்.
தங்களுக்கு அமைந்த திருமண வாழ்க்கை பற்றி பேச தொடங்குபவர்கள், தங்களது காதல் நினைவுகள் குறித்து பேசி, சில நாட்கள் ஒன்றாக பெங்களூரில் சுற்றி திரிகிறார்கள்.
கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷின் கணவர் மிகவும் கோபக்காரன் தினம் தினம் அடித்து கொடுமைப் படுத்துகிறார்.
இதனால் வாழ்கையே வெறுத்து போய் வாழ்ந்து வந்த கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், முன்னாள் காதலன் கதாநாயகன் ஜெய்யின் ஆறுதல் வார்த்தைகளும், பழைய நினைவுகளும் அவரை மீண்டும் வாழ்க்கையை வெறுத்து போய் வாழ்ந்து வந்த கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் கதாநாயகன் ஜெய்னால் புது வாழ்க்கை கிடைத்தது போல் காதலிக்க தொடங்குகிறார்.
இருவரும் ஒருவருக்கொருவர் நன்றாக பழகி வர கதாநாயகன் ஜெய்யுடன் ஒன்றாக வாழ்வதற்கு கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் முயற்சி செய்து வருகிறார்.
கதாநாயகன் ஜெய் தன் மனைவியிடம் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் விஷயத்தை மறைக்க தொடங்குகிறார்.
இறுதியில் ஐஸ்வர்யா ராஜேஷ்யை கதாநாயகன் ஜெய் எப்படி சமாளித்தார்? கதாநாயகன் ஜெய் மனைவியிடம் சிக்கிக் கொண்டாரா? சிக்கிக் கொள்ளவில்லையா? என்பதுதான் இந்த தீராக்காதல் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த தீராக்காதல் திரைப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் ஜெய் அன்பு, காதல் கோபம், பயம் என பல விதமான பரிணாமங்களில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
பிரச்சினைகளை சமாளிப்பதில் அற்புதமாக முகத்தில் நடிப்பை காட்டியுள்ளார்.
இந்த தீராக்காதல் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ், தனது காதலை வெளிப்படுத்தும் இடங்களிலும் கதாநாயகன் ஜெய்யை விடாமல் துரத்தும் பல இடங்களிலும் கைத்தட்டல் பெறுகிறார்.
கதாநாயகன் ஜெய்யின் மனைவியாக வரும் ஷிவதா மிகவும் அழகாக நடித்துள்ளார்.
பேபி வ்ரித்தி விஷால் மிக அருமையாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகமின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகமின் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சித்து குமார் அவருடைய பணியை அனைத்தையும் மிகவும் சிறப்பாக செய்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்களும் தனது முன்னாள் காதலியை சந்தித்த பிறகு எந்த மாதிரியான பிரச்சினைகள் வரும் என்பதை அழகான காதலுடன் மிக அருமையாகவும் மிகவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரோகின் வெங்கடேசன்.
சாதாரண கதையை எடுத்து கொண்டு திரைக்கதையில் மிகப்பெரிய வித்தியாசத்தை காட்டி ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் ரோகின் வெங்கடேசன்.
மொத்தத்தில் தீராக் காதல் திரைப்படம் காமம் இல்லாத காதல்.











