நாடு திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.5/5.
நடிகர் & நடிகைகள் :- தர்ஷன், மஹிமா நம்பியார், ஆர் எஸ் சிவாஜி, சிங்கம் புலி, அருள் தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்தா, மற்றும் பலர்,
எழுத்து & இயக்கம் :- எம். சரவணன்.
ஒளிப்பதிவாளர் :- கே.ஏ. சக்திவேல்.
படத்தொகுப்பாளர் :- பி.கே.
இசையமைப்பாளர் :- சி.சத்யா.
தயாரிப்பு நிறுவனம் :- ஶ்ரீ ஆர்ச் மீடியா & என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்.
தயாரிப்பாளர்கள் :- சக்கரா – ராஜ்.
ரேட்டிங் :- 3.5/ 5.
கொல்லிமலை மேல் உள்ள தேவநாடு என்ற மலைவாழ் மக்கள் வாழும் கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு எந்த ஒரு விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு சிறு கிராமமாக தேவநாடு கிராமம் இருக்கிறது.
இந்த மலைவாழ் மக்கள் வாழும் அந்த தேவநாடு என்ற கிராமத்தில் அரசு மருத்துவமனை இருந்தும் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் பூட்டி கிடைக்கிறது.
மருத்துவமனை இல்லாததால் அந்த கிராமத்தில் பல உயிர் இழப்புகள் நடக்கிறது.
இதனால் தேவ நாடு கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்கள் கதாநாயகன் தர்ஷன் தங்கை மருத்துவருக்கு படிக்க முடியவில்லை என தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
தன் தங்கையை இறந்த உடலை ரோட்டில் வைத்துக் கொண்டு அந்த ஊருக்கு வரும் பஸ்ஸை சிறை பிடித்து கலெக்டரிடம் அந்த கிராமத்தில் இருக்கும் பிரச்சினைகளை கூறி ஒரு மருத்துவரை வர வைக்கின்றனர்.
தேவநாடு கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கதாநாயகி மகிமா நம்பியார் மருத்துவராக வருகிறார்.
ஆனால் கதாநாயகி மகிமா நம்பியாருக்கு தேவநாடு கிராமம் பிடிக்காததால் உடனடியாக டிரான்ஸ்பர் வாங்கி வேறு ஊருக்கு செல்ல கதாநாயகி மகிமா நம்பியார் திட்டமிடுகிறார்.
தேவநாடு கிராமத்தில் உள்ள ஊர் தலைவராக இருக்கும் சிங்கம் புலி, அந்த ஊரில் உள்ள கதாநாயகன் தர்ஷன் மற்றும் ஆர்.எஸ். சிவாஜி ஆகியோர் கதாநாயகி மகிமா நம்பியாருக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
மருத்துவரான கதாநாயகி மகிமா நம்பியார் அந்த ஊர் மக்கள் சில உயிரை காப்பாற்றியதால் அந்த தேவநாடு ஊர் மக்கள் அவரை தெய்வமாய் பார்க்கின்றனர்.
இதனால் கதாநாயகி மகிமா நம்பியார் இந்த ஊரை விட்டு கிளம்பி விடக்கூடாது என்று ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து முடிவு செய்து சில வேலைகளை செய்கின்றனர்.
இறுதியில் கதாநாயகி மகிமா நம்பியார் தேவநாடு ஊரை விட்டு சென்றாரா? சொல்லவில்லையா? என்பதுதான் நாடு திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த நாடு திரைப்படத்தில் கதாநாயகனாக தர்ஷன் நடித்துள்ளார்.
ஒரு மலைவாழ் கிராமத்தில் உள்ள இளைஞர் கதாபாத்திரத்தில் கதாநாயகன் தர்ஷன் வாழ்ந்துள்ளார் என்று கூறலாம்.
கதாநாயகன் தர்ஷன் இவ்வளவு நாள் இந்த அருமையான நடிப்பை எங்கே ஒளித்து வைத்திருந்தார் என்று கேட்கும் அளவிற்கு மிகவும் சிறப்பான ஒரு நடிப்பை இந்த நாடு திரைப்படத்தில் கொடுத்துள்ளார்.
கதாநாயகன் தர்ஷன் இந்த நாடு திரைப்படத்தில் தனது 200 சதவீத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கதாநாயகன் தர்ஷன் தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய ஒரு எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நாடு திரைப்படத்தில் கதாநாயகியாக மகிமா நம்பியார் நடித்திருக்கிறார்.
கதாநாயகி மகிமா நம்பியார் மிகவும் இளகிய மனதுடன் தேவநாடு கிராமத்தில் உள்ள மக்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை செய்து தரும் மருத்துவராக மிகவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கதாநாயகி மகிமா நம்பியாருக்கு பிடித்த இடத்திற்கு செல்ல முடியாமல், அங்கேயும் இருக்க முடியாமல் தவிக்கும் நிலைமையை சிறப்பாக கையாண்டு எதார்த்தமான நடிப்பை இந்த நாடு திரைப்படத்தில் கொடுத்து இருக்கிறார்.
கலெக்டராக வரும் அருள்தாஸ் அந்த கதாபாத்திரத்திற்கு அளவான நடிப்பை கொடுத்து அருமையாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் தர்ஷனின் தந்தையாக ஆர் எஸ் சிவாஜி மற்றும் தேவ நாடு ஊர் தலைவராக சிங்கம் புலி வழக்கம்போல தங்களது அனுபவ நடிப்பை அருமையாகவும் அற்புதமாகவும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஊர் தலைவராக வரும் சிங்கம்புலி மகனாக நடித்திருப்பவரும் மிகவும் நன்றாக நடித்துள்ளார்.
சில காட்சிகளில் அவருடைய காமெடிகளும் பல இடங்களில் ஒர்க் ஆகி உள்ளது.
ஒளிப்பதிவாளர் ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு மலை சார்ந்த இடங்களை மிகவும் அருமையாகவும் பசுமையாகவும் காண்பித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஏ.சக்திவேல் தேவநாடு ஊரையும், இடத்தின் குளிர்ச்சியையும் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.
இசையமைப்பாளர் சி.சத்யாவின் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை திரைப்படத்தின் கதைக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
ஒரு சாதாரண கதையை எடுத்துக் கொண்டு மிகவும் அழுத்தமான திரைக்கதையின் மூலம் மிகவும் ஒரு எதார்த்தமான சிறந்த படைப்பை தமிழ் திரைப்பட உலகிற்கு கொடுத்துள்ளார் இயக்குனர் எம் சரவணன்.
தமிழ் திரைப்படங்களில் வழக்கமாக அடுத்து என்ன நடக்கும் என்று நாம் சிந்திக்கும் சில விசயங்களை மாற்றி தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்து விட்டார்.
ஒரு கிராமத்திற்கு ஒரு மருத்துவர் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தவே இப்படி ஒரு படைப்பை கொடுத்துள்ளார் இயக்குனர் எம் சரவணன் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
மொத்தத்தில் இந்த நாடு திரைப்படத்தில் மழைவாழ் மக்களுக்கு எட்டா கனியாக மாறிவிட்ட மருத்துவம் மற்றும் மருத்துவ படிப்பும் பற்றி கூறும் அருமையான திரைப்படம்.