இன்றைய ராசிபலன்கள் 04/09/2024.

இன்றைய ராசிபலன்கள்.

04-09-2024 புதன் கிழமை தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள்.

தமிழ் ஆண்டு, தேதி – குரோதி, ஆவணி 19
நாள் – மேல் நோக்கு நாள்
பிறை – வளர்பிறை

திதி

சுக்ல பக்ஷ பிரதமை – Sep 03 07:25 AM – Sep 04 09:47 AM

சுக்ல பக்ஷ துவிதியை – Sep 04 09:47 AM – Sep 05 12:21 PM

நட்சத்திரம்.

உத்திரம் – Sep 04 03:10 AM – Sep 05 06:14 AM

அஸ்தம் – Sep 05 06:14 AM – Sep 06 09:25 AM

கரணம்.

பவம் – Sep 03 08:34 PM – Sep 04 09:47 AM

பாலவம் – Sep 04 09:47 AM – Sep 04 11:03 PM

கௌலவம் – Sep 04 11:03 PM – Sep 05 12:21 PM

யோகம்.

ஸாத்தியம் – Sep 03 07:05 PM – Sep 04 08:02 PM

சுபம் – Sep 04 08:02 PM – Sep 05 09:07 PM

வாரம்.

புதன்கிழமை

சூரியன் மற்றும் சந்திரன் நேரம்.

சூரியோதயம் – 6:14 AM
சூரியஸ்தமம் – 6:22 PM

சந்திரௌதயம் – Sep 04 6:58 AM
சந்திராஸ்தமனம் – Sep 04 7:20 PM

அசுபமான காலம்.

இராகு – 12:18 PM – 1:49 PM
எமகண்டம் – 7:45 AM – 9:16 AM
குளிகை – 10:47 AM – 12:18 PM

துரமுஹுர்த்தம் – 11:54 AM – 12:42 PM

தியாஜ்யம் – 11:17 AM – 01:05 PM

சுபமான காலம்.

அமிர்த காலம் – 10:25 PM – 12:13 AM

பிரம்மா முகூர்த்தம் – 04:38 AM – 05:26 AM

ஆனந்ததி யோகம்.

வர்தமானம் Upto – 06:14 AM
அனந்தம்

வாரசூலை.

சூலம் – North
பரிகாரம் – பால்

புதன் கிழமை ஹோரை.

காலை

06:00 – 07:00 – புத – சுபம்
07:00 – 08:00 – சந் – சுபம்
08:00 – 09:00 – சனி – அசுபம்
09:00 – 10:00 – குரு – சுபம்
10:00 – 11:00 – செவ் – அசுபம்
11:00 – 12:00 – சூரி – அசுபம்
பிற்பகல்
12:00 – 01:00 – சுக் – சுபம்
01:00 – 02:00 – புத – சுபம்
02:00 – 03:00 – சந் – சுபம்

மாலை

03:00 – 04:00 – சனி – அசுபம்
04:00 – 05:00 – குரு – சுபம்
05:00 – 06:00 – செவ் – அசுபம்
06:00 – 07:00 – சூரி – அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

மேஷம்

உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். பேச்சுக்களில் அதிகாரம் மேம்படும். எதிர்பார்த்த சில உதவிகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். கல்வி தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : முயற்சிகள் ஈடேறும்.
கிருத்திகை : சாதகமான நாள்.

ரிஷபம்

உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கற்றல் திறனில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : பயணங்கள் கைகூடும்.
ரோகிணி : தெளிவுகள் ஏற்படும்.
மிருகசீரிஷம் : சுறுசுறுப்பான நாள்.

மிதுனம்

குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலம் பிறக்கும். உயர்கல்வி தொடர்பான குழப்பம் விலகும். குழந்தைகளின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கடன் தொடர்பான நெருக்கடிகள் சற்று குறையும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : பொறுப்புகள் மேம்படும்.
திருவாதிரை : அனுகூலம் பிறக்கும்.
புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.

கடகம்

பிள்ளைகள் தொழிலில் உதவிகரமாக இருப்பார்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். தன வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : தீர்வு கிடைக்கும்.
பூசம் : பிரச்சனைகள் குறையும்.
ஆயில்யம் : அனுகூலம் ஏற்படும்.

சிம்மம்

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தோற்றப் பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். பேச்சுத் திறமையால் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
பூரம் : வரவுகள் கிடைக்கும்.
உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.

கன்னி

பிற மொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வர்த்தக வியாபாரம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அனுபவம் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். சாதுரியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணிகளில் சில மாற்றமான தருணங்கள் அமையும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
அஸ்தம் : அனுபவம் மேம்படும்.
சித்திரை : மாற்றமான நாள்.

துலாம்

பணிகளில் இருந்து வந்த நெருக்கடியான சூழல் குறையும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உணவு துறைகளில் திறமைகள் வெளிப்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

சித்திரை : நெருக்கடிகள் குறையும்.
சுவாதி : திறமைகள் வெளிப்படும்.
விசாகம் : வாய்ப்புகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்

செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வாக்குவன்மையின் மூலம் நன்மை உண்டாகும். சகோதரர்களின் வழியில் சில உதவிகள் சாதகமாக அமையும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

விசாகம் : தடைகள் அகலும்.
அனுஷம் : ஆர்வம் பிறக்கும்.
கேட்டை : உதவிகள் சாதகமாகும்.

தனுசு

உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். கல்வி பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். தர்ம செயல்களில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். கலை சார்ந்த பணிகளில் அனுபவம் ஏற்படும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். நற்செயல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

மூலம் : அனுசரித்துச் செல்லவும்.
பூராடம் : இழுபறிகள் மறையும்.
உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.

மகரம்

மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வர்த்தகப் பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவோணம் : முன்னேற்றமான நாள்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

வர்த்தகப் பணிகளில் முதலீடுகளை குறைத்துக் கொள்ளவும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். வேலையாட்கள் பற்றிய புரிதல் மேம்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : குறைத்துக் கொள்ளவும்.
சதயம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
பூரட்டாதி : புரிதல்கள் மேம்படும்.

மீனம்

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சுப காரிய பேச்சுக்கள் கைகூடுவதற்கான சூழ்நிலை ஏற்படும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

பூரட்டாதி : எண்ணம் கைகூடும்.
உத்திரட்டாதி : சிந்தித்துச் செயல்படவும்.
ரேவதி : மனப்பக்குவம் பிறக்கும்.

error: Content is protected !!