ராஜபீமா திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ஆர்வ், ஆஷிமா நெர்வால், ஓவியா, யாஷிகா ஆனந்த், நாசர், கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- நரேஷ் சம்பத்.
ஒளிப்பதிவாளர் :- எஸ் ஆர் சதீஷ்குமார்.
படத்தொகுப்பாளர் :- கோபி கிருஷ்ணா.
இசையமைப்பாளர் :- சைமன் கே கிங்.
தயாரிப்பு நிறுவனம் :- சுரபி ஃபிலிம்ஸ்.
தயாரிப்பாளர் :- எஸ்.மோகன்.
ரேட்டிங் 3.5./5.
தாய் தந்தையுடன் சிறுவயதில் வாழ்ந்து வரும் கதாநாயகன் ஆரவ் தாய் மீது அளவு கடந்த பாசத்துடன் இருக்க ஒரு நாள் திடீரென அவருடைய தாய் மறைந்து விடவே தாயை இழந்து மனவேதனையில் இருக்கிறான்.
கதாநாயகன் ஆரவ் தன் தாய் இழுந்து மன வேதனை இருக்கும் நிலையில் ஆறுதல் தரும் விதமாக ஊருக்குள் ஒரு குட்டி யானை ஒன்று வர அதன் மீது பாசம் ஏற்படவே கதாநாயகன் ஆரவுக்கு யானையை, பிடித்துப் போகவே, கதாநாயகன் ஆர்வின் தந்தை நாசர் அந்த குட்டி யானையை வீட்டில் வைத்து வளர்க்க முடிவெடுத்து அந்த குட்டி யானையை தன்னுடன் வீட்டிற்கு அழைத்து சென்று விடுகிறார்கள்.
அந்த குட்டி யானையை விட்டில் வளர்ப்பதற்காக கதாநாயகன் ஆரவின் தந்தை நாசர் அரசாங்கத்திடம் முறையாக அனுமதியும் பெற்றுவிடுகிறார்.
அந்த குட்டி யானைக்கு பீமா என பெயர் வைத்து தனது குடும்பத்தில் ஒருவனாக வளர்த்து வருகிறார்கள்.
கதாநாயகன் ஆரவும் குட்டி யானை பீமாவும் சகோதரர்களாக உயிருக்கு உயிராக பழகி வருகிறார்கள்
கதாநாயகன் ஆரவ் வளர்ந்து வாலிபனாக அந்த குட்டி யானையும் வளர்ந்து விடுகிறது.
இந்த நிலையில் கதாநாயகன் ஆரவ், வனப்பகுதியில் வாழும் யானைகளைக் கொன்று தந்தம் கடத்துபவர்களை வனத்துறை அதிகாரியிடம் பிடித்துக் கொடுத்து விடுகிறார்.
இந்த நிலையில் சிறிது நாட்கள் கடந்தபிறகு, கதாநாயகன் ஆரவ் வளர்த்து வரும் யானை பீமாவுக்கு மதம் பிடித்துள்ளது என கூறி அரசு அதிகாரிகள் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அதிரடியாக அழைத்து சென்று விடுகிறார்கள்.
கதாநாயகன் ஆரவ் பீமாவை அரசு அதிகாரிகள் அழைத்து சென்று விட்டார்கள் என தெரிந்தவுடன் பதறியடித்துக் கொண்டு யானைகள் புத்துணர்வு முகாமிற்கு சென்று பார்க்கும் போது, தன்னுடைய பீமா அந்த முகாமில் இல்லை என்பது தெரியவருகிறது.
கதாநாயகன் ஆரவ் வளர்த்த யானை பீமா காணாமல் போனதற்கு யார் காரணம்? காணாமல் போன யானை பீமாவுக்கு என்னவானது? என்பதுதான் இந்த ராஜபீமா திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ராஜபீமா திரைப்படத்தில் கதாநாயகனாக ஆரவ் நடித்திருக்கிறார்.
ராஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் ஆரவ். மாஸ் கதாநாயகனுகனா அத்தனை அம்சங்களோடும் யானை மீது பாசம் காட்டும்போது யானை காணாமல் போனவுடன் காட்சிகளில் நெகிழ வைத்து, வில்லன்களுடன் மோதுகிற சண்டை காட்சிகளில் உடல்பலம் காட்டி, காதல் காட்சிகளில் நடித்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனத்தை இருக்கிறார்.
இந்த ராஜபீமா திரைப்படத்தில் கதாநாயகியாக ஆஷிமா நெர்வால் நடித்திருக்கிறார்.
கதாநாயகி ஆஷிமா நெர்வால் அனைத்து திரைப்படங்களிலும் வழக்கமாக கதாநாயகனை காதலிக்கிற காட்சிகள் பழகிப்போன வேலைதான் என்றாலும் அதை உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார்.
ஓவியா, ஒரு பாடலுக்கு மட்டுமே கலர்ஃபுல் உடைகளில் கவர்ச்சி காட்டி ரசிக்கும்படி ஆடிவிட்டுப் போகிறார்
அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே எஸ் ரவிக்குமாருக்கு. தினமும் ஒரு நிறத்தில் துண்டு போட்டுக் கொண்டு வலம் வருகிற அவர் தனது கதாப்பாத்திரத்துக்கு தேவையான வில்லத்தனத்தை பாஸ்மார்க் போடுகிற அளவுக்கு அருமையாக நடித்துள்ளார்.
அமைச்சர் எஸ் ரவிக்குமாரின் வளர்ப்பு மகன கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகிபாபு நகைச்சுவைக் காட்சிகள் எடுபடவில்லை.
நடிகை யாஷிகா ஆனந்த். கதாபாத்திரம் கதையின் முக்கியமான தருணங்களிலும் பங்களித்திருக்கிறார்.
கதாநாயகனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாசர், மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருவி மதன், அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயாஜி ஷின்டே ஆகியோருடன் ஜெயக்குமார், கராத்தே வெங்கடேஷ் என அனைத்து நடிகர்களுக்கும் கதையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
பீமாவாக வரும் யானையின் ஒவ்வொரு அசைவும் ரசிகர்களை உற்சாகமாக்கி மக்கள் மனதில் இடம்பிடிக்கிறது.
ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் சதீஷ்குமார் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் மிக அருமையாக திரைப்படமாகி இருக்கிறார்.
இசையமைப்பாளர் சைமன் கே கிங் இசையில் பாடல்கள் பின்னணி இசையிலிருக்கும் உழைப்பு கதையோட்டத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
ஐந்தறிவு உள்ள யானைகள் ஆறறிவு படைத்த மனிதர்களால் எப்படியெல்லாம் அழிக்கப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டி, யானைகளை பாதுகாக்க ஒவ்வொருவரும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி மிக அருமையாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் நரேஷ் சம்பத்.
விலங்குகள் மனிதர்களுக்குமான பாசப்பிணைப்பை மையப்படுத்திய அதில் மூடநம்பிக்கையை புகுத்தி விறுவிறுப்பாக உருவாக்கிய அனைவருக்கும் ராஜபீமாவுக்கு ‘யானை’ பலம் கிடைத்துள்ளது.
மொத்தத்தில் இந்த ராஜபீமா திரைப்பட குழுவினருக்கு யானையின் தும்பிக்கையால் பூமாலை அணிவித்துப் பாராட்டலாம்.











