நீல நிறச் சூரியன் திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சம்யுக்தா விஜயன், கிட்டி, கஜராஜ், கீதா கைலாசம், பிரசன்னா பாலச்சந்திரன், கே வி என் மணிமேகலை, மாசந்த் நடராஜன், ஹரிதா, வெற்றியாளர் ராமச்சந்திரன், மோனா பெத்ரா, செம்மலர் அன்னம், கௌசல்யா சரவணராஜா, விஸ்வநாத் சுரேந்திரன், அஜய் ஈபன் கோபால், வைதீஸ்வரி, அனிருத் ரேவன், சத்ய மருதாணி, சாவித்திரி எஸ், சாரதா, ரஞ்சித் குமார் ஜி, தேவ் ஹபிபுல்லா, சாய் பாலா, சரவணன், அன்னி, மற்றும் பலர்
எழுத்து & இயக்கம் :- சம்யுக்தா விஜயன்.
ஒளிப்பதிவாளர் :- ஸ்டீவ் பெஞ்சமின்.
படத்தொகுப்பாளர் :- ஸ்டீவ் பெஞ்சமின்.
இசையமைப்பாளர் :- ஸ்டீவ் பெஞ்சமின்.
தயாரிப்பு நிறுவனம் :- ஃபர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- மாலா மன்யன்.
ரேட்டிங்:- 2.75./5.
ஆண் மகனாகப் பிறந்தாலும் ஹார்மோன் பாதிப்பு காரணமாக வேறு பாலினத்தவராக மாறும் நபர்களை ஆணாக இருந்து பெண்ணாக மாற்றப்பட்டால் அவர்களை அவர்களை திருநங்கைகளாக பெண்ணாக இருந்து நானாக பட்டால் திரு நம்பியாக பார்க்கும் இந்த சமுதாயம் பெண்ணாகவோ ஆணாகவோ இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
இப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் கதாநாயகன் அரவிந்தாக இருந்து, பானுவாக மாற்றம் அடைவது எப்படி?,
சிறுவயதில் இருந்து பெண்ணாக மாற வேண்டும் என்று ஆசையில் ஆணாக இருக்கும் கதாநாயகன் பெண்ணாக மாறக்கூடிய சூழலுக்கு தள்ளப்படுகின்றார்.
ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் கதாநாயகன் இந்த ஹார்மோன் மாற்றத்தால் ஆசிரியராக மாறுகிறார்.
அதை கதாநாயகன் அரவிந்தாக இருந்து பானுவாக மாறியதால் அவருடைய பெற்றோர், மற்றும் உறவினர்கள் இந்த சமுதாயம் எப்படி எல்லாம் பார்க்கிறார்கள் என்பதுதான் இந்த ‘நீல நிற சூரியன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த நீல ‘நிற சூரியன்’ திரைப்படத்தில் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் சம்யுக்தா விஜயன், நடித்திருக்கிறார்.
அரவிந்த் என்ற ஆசிரியர் கதாபாத்திரத்திலும் மற்றும் பானு என்ற ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சம்யுக்தா விஜயன் நடிப்பு மட்டுமல்லாமல், இந்த நீல நிற சூரியன் திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார்.
பிறப்பில் ஆணாக பிறந்து இருந்தாலும், தன் பெண்ணாக வேண்டும் என்ற விருப்பத்தை நோக்கி அவர் பயணிக்கும் போது தனக்குள் இருக்கும் பதற்றத்தை தனது மிகவும் நேர்த்தியான நடிப்பு மூலம் சிறப்பாக வெளிக்காட்டியிருக்கும் சக்யுக்தா விஜயன், பானுவாக மாறிய போது இந்த சமூகத்தின் பார்வையை எப்படி கடந்து செல்ல வேண்டும் என்பதை தனது இயல்பான நடிப்பு மூலம் மிக அருமையாகவும் அற்புதமாகவும் வெளிக்காட்டியிருக்கிறார்.
மனநல மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிட்டி, கதாநாயகன் அரவிந்தின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கஜராஜ் கதாநாயகன் அரவிந்தின்
தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம், அரவிந்தின் உறவினர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரசன்னா பாலச்சந்திரன், பள்ளி துணை தலைமை ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே.வி.என்.மணிமேகலை, கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மசாந்த் நட்ராஜன், ஹரிதா, வின்னர் ராமச்சந்திரன், மோனா பத்ரா, செம்மலர் அன்னம், கெளசல்யா, விஸ்வநாத் சுரேந்திரன், வைதீஸ்வரி என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் ஒரு சில காட்சிகளில் மட்டும் முகம் காட்டினாலும் திரைக்கதையோட்டத்திற்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
திருநங்கை மற்றும் திருநம்பி ஆகியோரின் சமுதாயத்தில் அவர்கள் அனுபவிக்கும் வலியை மிகச் சிறப்பாகவும் சோகமாக மட்டுமே சொல்லாமல், திரையில், சிறப்பான மேக்கிங் மூலம் வைத்திருப்பது இயக்குநராக ஒரு விசயத்தை மக்களிடம் பதிய வைத்து இயக்குனராக மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.
ஒளிப்பதிவு, இசை மற்றும் படத்தொகுப்பு ஆகிய பணிகளை கவனித்துள்ள ஸ்டீவ் பெஞ்சமின், பணி திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பது மட்டுமல்லாமல் திரைப்படத்தின் தரத்தை பன் மடங்கு உயர்த்தி இருக்கிறார்.
ஆணாக இருந்து பெண்ணாக மாற வேண்டும் என்றும் பெண்ணாக இருந்து ஆணாக மாற வேண்டும் என்ற
ஹார்மோன் குறைப்பாட்டினால் ஏற்படும் இந்த சமுதாயத்தில் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்றும் அவர்கள் எப்படி எல்லாம் நடத்தப்படுகிறார்கள் என்பதையும் மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் சம்யுக்தா விஜயன், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சிகளை மிக கவனமுடன் கையாண்டு பார்வையாளர்களை யோசிக்க வைத்து இருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘நீல நிற சூரியன்’ திரைப்படம் இந்த சமுதாயத்தில் உள்ள மக்களை மிகப்பெரிய அளவில் இந்த திரைப்படம் சிந்திக்க வைக்கும்.











