’லப்பர் பந்து’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா , சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன் , கீதா கைலாசம் , தேவ தர்ஷினி , ஜென்சன் திவாகர் , TSK மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- தமிழரசன் பச்சமுத்து.
ஒளிப்பதிவாளர் :- தினேஷ் புருஷோத்தமன்.
படத்தொகுப்பாளர் :- ஜி.மதன்.
இசையமைப்பாளர் :- ஷான் ரோல்டன.
தயாரிப்பு நிறுவனம் :- பிரின்ஸ் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- ஏஸ்.லக்ஷ்மன் குமார்.
ரேட்டிங் :- 4.5/5.
‘அட்ட கத்தி’ தினேஷ், தனது தாய் மற்றும் மனைவி மகள் அவர்களுடன் பெயிண்டிங் வேலை செய்து கொண்டு கிரிக்கெட் விளையாட்டில் பேட்டிங்கில் கெத்து காட்டும் குடும்பம் மற்றும் வேலையை விட கிரிக்கெட்டுக்கு மட்டுமே உயிராக நினைத்து விளையாடுகிறார்.
எந்த ஊரில் கிரிக்கெட் போட்டி நடந்தாலும் உடனடியாக ‘அட்ட கத்தி’ தினேஷ், விளையாட கிளம்பி விடுவார்.
சேவாக்கைப் போல் கெத்தாக ஓப்பனிங் இறங்கி வாணவேடிக்கை நடத்துபவர் ‘அட்ட கத்தி’ தினேஷ்.
ஆனால், தன் மனைவியின் முன்பு பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார்.
அதே ஊரில் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண், தலைச்சிறந்த கிரிக்கெட் பவுலராக இருந்தாலும், சாதி பாகுபாடு காரணமாக சொந்த ஊரில் உள்ள கிரிக்கெட் அணியால் புறக்கணிக்கப்படுகிறார்.
இதனால், வாய்ப்பு கிடைக்கும் அணிகளில் சென்று விளையாடி தனது கிரிக்கெட் விளையாடும் ஆசையை தீர்த்துக் கொள்கிறார்.
ஆனால், கதாநாயகன் ஹரிஷ் கல்யாண், நிரந்தரமாக ஒரு அணியும் இல்லை.
கதாநாயகன் ஹரிஷ் கல்யாண், ஏற்றார் போல் கதாநாயகி சஞ்சனாவை தொடங்குகிறார்.
கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் இடையே கிரிக்கெட் விளையாட்டின் மூலம் ஆரம்பிக்கும் ஈகோ மோதல், அவர்களது வாழ்க்கையிலும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது.
என்ன தான் சிக்கல் வந்தாலும் கிரிக்கெட் விளையாடுவதை மட்டும் விடாமல் இருக்கும் அட்டகத்தி தினேஷ் மற்றும் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட ஈகோ மோதல் மற்றும் மனிதர்களின் மனதில் இருக்கும் பாகுபாடு, அதே கிரிக்கெட் விளையாட்டு மூலம் எப்படி தீர்வு கிடைக்கிறது.
அட்டகத்தி தினேஷ் மூலம் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் இருவருக்குள்ளும் இருக்கும் ஈகோவை விட்டுவிட்டு இருவரும் ஒன்று சேர்ந்தார்களாஒ? சேரவில்லையா? என்பதுதான் இந்த லப்பர் பந்து திரைப்படத்தின் மீதி கதை
இந்த லப்பர் வந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாணின் அன்பு கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும், அந்த கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டு ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விடுகிறார்.
மற்றொரு கதாநாயகனாக ’அட்ட கத்தி’ தினேஷ் தனது வயதுக்கு ஒத்துவராத வயது முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார்.
அவருடைய மிகவும் இயல்பான நடிப்பு அவரது முயற்சியை வெற்றியடைய செய்தாலும், மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
’அட்ட கத்தி’ தினேஷ் தனது நடிப்பு மூலம் தனது வயதை மறைத்து தனது கதாபாத்திரத்தை ரசிக்க வைத்துவிடுகிறார்.
இந்த லப்பர் பந்து திரைப்படத்தில் கதாநாயகியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார்.
கதாநாயகன் ஹரிஷ் கல்யாணின் காதலியாகவும், தினேஷின் மகளாகவும் நடித்திருக்கும் கதாநாயகி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிப்பின் முலம் சளைத்தவள் அல்ல என்பதை காட்சிக்கு காட்சி நிரூபிக்கிறார்.
அட்டகத்தி தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் சுவாசிகா, பல இடங்களில் தன்னை சுற்றி நடிக்கும் நடிகர்களை தனது நடிப்பு மூலம் காலி பண்ணி விடுகிறார்.
தனது கண் பார்வை மூலமாகவே தனது கோபத்தை வெளிக்காட்டி, தனது வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி மூலமாக மிரட்டி இருக்கிறார்.
கிரிக்கெட் விளையாட்டின் மீது தீரா காதல் கொண்டவராக நடித்திருக்கும் காளி வெங்கட், வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பால் கருப்பையா என்ற கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
கதாநாயகன் ஹரிஷ் கல்யாணின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பால சரவணன், தனது வசனங்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பதோடு, மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
அட்டகத்தி தினேஷின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜென்சன் திவாகர் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரத்தை கலகலப்பாக கையாண்டு சிரிக்க வைக்கிறார்.
கிரிக்கெட் போட்டியின் தொகுத்து வழங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதித்யா கதிருக்கு ஐபிஎல் தொடரின் தமிழ் வர்ணனையாளர் வாய்ப்பு கிடைக்கும் என்பது இந்த திரைப்படத்தின் மூலம் உறுதியாகி உள்ளது.
கிக்கெட் போட்டியில் அவர் தொகுத்து வழங்கும் கமெண்ட்ரி வசனங்கள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக திரையரங்கையே திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.
அட்டகத்தி தினேஷின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம், டி.எஸ்.கே, ஹரிஷ் கல்யாணின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவதர்ஷினி என அனைவரும் கதாபாத்திரத்திற்கு சிறப்பான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கேமரா கிரிக்கெட் போட்டிகளையும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் மிக சரியான முறையில் ஒளிப்பதிவு மூலம் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் லப்பர் பந்துக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்.
கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அதன் மீது இளைஞர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை வைத்துக் கொண்டு மனதில் இருக்கும் ஈகோ மற்றும் பாகுபாட்டை கலைய முயற்சி செய்து இருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
கிரிக்கெட் விளையாட்டை கதை தான் என்றாலும், அதில் குடும்ப உறவு, காதல், சாதி பாகுபாடு, உணர்வு அரசியல் பற்றி பேசினாலும், அனைத்தையும் கலகலப்பாகவும், மனதுக்கு நெருக்கமாகவும் சொல்லி அனைத்து தரப்பினரையும் கொண்டாட கூடிய ஒரு ஜனரஞ்சக படைப்பை மிக அருமையாக இயக்கியிருக்கும் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து அவர்களுக்கு தமிழ் திரைப்பட உலகம் சிவப்பு கம்பளம் விரிப்பது உறுதி.
மொத்தத்தில், இந்த ‘லப்பர் பந்து’ தமிழ் திரைப்பட ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்துள்ளது.