கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஏகன்,யோகி பாபு, பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, குட்டி புலி தினேஷ், லியோ சிவகுமார், திருச்செந்தூர் ஸ்ரீராம், சத்யா, மானஸ்வி கொட்டாச்சி, பாவா செல்லதுரை, ரியாஸ், இயக்குனர் நவீன் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம் :- சீனு ராமசாமி.
ஒளிப்பதிவாளர் :- அசோக் ராஜ்.
படத்தொகுப்பாளர் :- A.ஶ்ரீகர் பிரசாத்.
இசையமைப்பாளர் :- N.R. ரகுநாதன்.
தயாரிப்பு நிறுவனம் :- விஷன் சினிமா ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- D.அருள் ஆனந்து, மேத்யூ அருள் ஆனந்து
ரேட்டிங் :- 2.5./5.
ராணுவத்திற்கு சென்று பல வருடங்கள் கழித்து தனது சொந்த கிராமத்திற்கு மனைவி ஐஸ்வர்யா தத்தா மகன் செல்லத்துரை மகள் ஜெயசுதா பார்க்க சிடிசி ரியாஸ் வருகிறார்.
சிடிசி ரியாஸ் அவருடைய மனைவி ஐஸ்வர்யா தத்தா கள்ளக்காதலனுடன் சந்தோஷமாக இருப்பதை தெரிய வர, மனைவி ஐஸ்வர்யா தத்தா மற்றும் அவருடைய கள்ளக்காதலனை இருவரையும் கொலை செய்வதற்கு முயல்கிறார்.
சிடிசி ரியாஸ் அவருடைய மனைவி ஐஸ்வர்யா தத்தா கள்ளக்காதலனுடன் ஊரை விட்டு
இருவரும் தப்பித்து ஓடி விடுகிறார்கள்.
மனைவி ஐஸ்வர்யா தத்தா ஊரைவிட்டு ஓடிவிட்ட அவன் அவமானத்தால் சிடிசி ரியாஸ் தன் மகன் செல்லத்துரை மற்றும் மகள் ஜெயசுதா இருவரையும் கொண்டு வந்து அவர்களுடைய பாட்டி வீட்டில் விட்டுவிட்டு சென்று விடுகிறார்.
அந்த ஊரில் கோழிப்பண்ணை நடத்தி வரும் யோகி பாபு உதவி கிடைக்க அவர் பெரியப்பாவாக ஏற்றுக் கொண்டு அவரிடமே கோழிப்பண்ணையில் செய்து தன் தங்கையை காப்பாற்றி வருகிறார்.
யோகி பாபு நடத்தி வரும் கோழி கடையில் வேலை செய்து கொண்டு கதாநாயகன் ஏகன் தனது தங்கை சத்யாதேவி கல்லூரியில் படிக்க வைக்கிறான்.
அதே ஊரில் பானை கடை நடத்தி வரும் கதாநாயகி பிரகிட சகா கதாநாயகன் ஏகனை காதலித்து வர கதாநாயகன் ஏகன் கதாநாயகி பிரகிடா சகாவை கண்டு கொள்வதே இல்லை.
இந்த நிலையில் தன் தங்கையிடம் காதலிக்கும் லியோ சிவகுமார் வீட்டுக்கே வந்து தன் தங்கையின் கையைப் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்து அவனை அடித்து விரட்டி விடுகிறான் கதாநாயகன் ஏகன்.
தன் தங்கை காதலித்த டியோ சிவகுமாரை தன் தங்கைக்கு திருமணம் செய்து வைத்தாரா? வைக்கவில்லையா? தன்னை காதலித்து வரும் கதாநாயகி பிறகிட சகாவை ஏற்றுக் கொண்டாரா? ஏற்றுக் கொள்ளவில்லையா! என்பதுதான் இந்த கோழி பண்ணை செல்லதுரை திரைப்படத்தின் மீதிக்கதை
இந்த கோழி பண்ணை செல்லதுரை திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக ஏகன் நடித்துள்ளார்.
செல்லத்துரை கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக புரிந்து இருக்கிறார் புதுமுக கதாநாயகன் ஏகன்
இந்த கோழி பண்ணை செல்லத்துரை திரைப்படத்தில் கதாநாயகியாக பிரகிட சகா நடித்திருக்கிறார்.
செல்லதுரையின் காதலியாக தாமரைச்செல்வி கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் ஏகனின் தங்கையாக நடித்திருக்கும் சத்யா தேவி கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
யோகி பாபுவின் கதாபாத்திரத்தை பற்றி சொல்லவே வேண்டாம் பெரிய சாமியாகவே வாழ்ந்திருக்கிறார்.
யோகி பாபு நகைச்சுவையை தாண்டி, ஒரு நல்ல கதாபாத்திரத்தை ஏற்று அதில் அழகாக நடித்துள்ளார்.
அவருடைய காமெடி இந்த திரைப்படத்திற்கு கை கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.
கதாநாயகன் ஏகன் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிடிசி ரியாஸ் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அருமையாக நடித்து இருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மிக அருமையாக நடித்திருக்கிறார்கள் .
ஒளிப்பதிவாளர் அசோக் ராஜ் தேனி மாவட்டத்தின் இயற்கை எழிலையும், வராக நதியின் ரம்மியத்தையும் சிறப்பான ஒளிப்பதிவு மூலம் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கையேந்தும் கடவுளே பாடல் திரும்ப திரும்ப கேட்கும் அளவிற்கு அமைந்திருக்கிறது.
அண்ணன் தங்கை பாசத்திற்கான கதையை யோசித்த இயக்குனர் சீனு ராமசாமி திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் தமிழ் திரைப்பட ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில் இந்த கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம் நாட்டு கோழியாக இருக்கும் என பார்த்தால் நோய் வந்த கோழியாக இருக்கிறது.