காதலிக்க நேரமில்லை திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, வினய் ராய், டிஜே பானு, ஜான் கொக்கன், லால், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி, ரோகன் சிங், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கிருத்திகா உதயநிதி.

ஒளிப்பதிவாளர் :- கேவெமிக் ஆரி.

படத்தொகுப்பாளர் :- லாரன்ஸ் கிஷோர்.

இசையமைப்பாளர் :- ஏ ஆர் ரஹ்மான்.

தயாரிப்பு நிறுவனம் :- ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரைவேட் லிமிடெட்.

தயாரிப்பாளர் :- எம்.செண்பக மூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை

ரேட்டிங்:- 3.75/5.

கதாநாயகன் ரவி மோகன் பெங்களூரில் தாய் இல்லாமல் தந்தை லாலுடன் வாழ்ந்து வருகிறார்.

தனக்கு திருமணம் நடந்தாலும் நான் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லை.

நிச்சயதார்த்தம் நடக்கும் நாளில் கதாநாயகன் ரவி மோகனை விட்டு இவருடைய காதலி நிச்சயதார்த்தத்துக்கு வராமல் சென்று விடுகிறார்.

இந்த நிலையில் கதாநாயகன் ரவி மோகன் மற்றும் நண்பர்கள் வினயராய், யோகி பாபுவுடன் இணைந்து ஒருநாள் முவரும் விந்து தானம் கொடுக்க அதில் கதாநாயகன் ரவி மோகனின் விந்து, விந்து கொடையாளர் லிஸ்டில் சேர்ந்து விடுகிறது.

அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சென்னையில் தாய் லட்சுமி ராமகிருஷ்ணன், தந்தை பாடகர் மனோவுடன், வாழ்ந்து வரும் கதாநாயகி நித்யா மேனன், தனது காதலர் ஜான் கொக்கன் சந்திக்க அவர் விட்டிற்க்கு செல்லும் போது வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் அவரை விட்டு கதாநாயகி நித்யா மேனன், விலகி கொள்கிறாள்.

கதாநாயகி நித்யா மேனனுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்ப இதனால், டெஸ்ட் ட்யூப் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு எடுக்கிறாள்.

கதாநாயகன் ரவி மோகன் கொடுத்த விந்து மூலம் கதாநாயகி நித்யா மேனன் கர்ப்பமாகிறார்.

கதாநாயகி நித்யா மேனன் கர்ப்பமாக இருக்கும் நிலையில், தன் கருவில் இருக்கும் குழந்தைக்கான அப்பா யார்? என்பதை தெரிந்துக் கொள்வதற்காக பெங்களூர் செல்கிறார்.

பெங்களூர் சென்ற கதாநாயகி நித்யா மேனனுக்கு கதாநாயகன் ரவி மோகனுடன் நட்பு ஏற்படுகிறது.

கதாநாயகன் ரவி மோகன் கதாநாயகி நித்யா மேனன் இருவருக்கும் கண்டவுடன் காதல் வயப்படுகிறார்கள்.

கதாநாயகன் ரவி மோகனுக்கு குழந்தைகள் பிடிக்காது என்று கதாநாயகி நித்யா மேனன் தெரிந்தவுடன் அப்பொழுது பிரிந்து சென்று விடுகிறார்.

கதாநாயகி நித்யா மேனன் சென்னைக்கு திரும்பியதும் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றுக் கொண்டு தனது சித்தியுடன் வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகன் ரவி மோகன் எட்டு ஆண்டுகள் ஆனநிலையில் சென்னைக்கு வருகிறார்.

கதாநாயகி நித்யா மேனனை சந்திக்கும் ரவி மோகன் மீண்டும் இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள்.

இறுதியில் கதாநாயகன் ரவி மோகன், கதாநாயகி நித்யா மேனன் இருவரும் காதலில் வெற்றி பெற்று இருவரும் ஒன்று சேர்ந்தார்களா?, ஒன்று சேரவில்லையா?, கதாநாயகி நித்யா மேனனின் மகனுக்கு கதாநாயகன் ரவி மோகன்தான் தந்தை என்று தெரிந்ததா? தெரியவில்லையா?, என்பதுதான் இந்த காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் கதாநாயகனாக ரவி மோகன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்து இருக்கும் ரவி மோகன், மிகவும் துறுதுறு இளைஞனாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

இரண்டு பெண்களிடம் மாட்டி கொண்டு தவிக்கும் காட்சிகளில் நடிப்பின் மூலம் பாராட்டை பெற்று இருக்கிறார்.

இந்த காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் கதாநாயகி நித்யா மேனன், அழகான நடிப்பை கொடுத்து சிறப்பு சேர்த்திருக்கிறார்.

குழந்தை பெற்றுக் கொள்ள துடிப்பது, பெற்றோர்களிடம் சண்டை போடுவது, கதாநாயகன் ரவி மோகன் மீது காதல் கொள்வது என கிடைக்கும் அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

இந்த காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக டிஜே பானு, நடித்திருக்கிறார்.

வினய் ராய், கே என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார்.

யோகி பாபு ஆங்காங்கே சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

கதாநாயகி நித்யா மன்னனின் காதலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் கொக்கேன், கதாநாயகன் ரவி மோகனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லால்
கதாநாயகி நித்யா மேனன் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் கதாநாயகி நித்யா மேனன் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாடகர் மனோ ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரியின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் கலர்ஃபுல்லாக கட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பராக உள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசையில் பாராட்டை பெற்று இருக்கிறார்.

குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் ஒரு பெண்ணும் குழந்தை பெற்றுக் கொள்ளவே கூடாது என்று நினைக்கும் ஒரு ஆணின் மனநிலையை வைத்து கதை திரைக்கதை அமைத்து ஒரு காதல் கதையாக மிகவும் அருமையாக திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.

திரைப்படத்தில் அதிக அளவில் ஆங்கில வார்த்தைகள் வசனமாக வைத்து இருப்பதால் இது அனைத்து தர ரசிகர்களுக்கும் புரியுமா என்பது கேள்விக்குறி தான்.

மொத்தத்தில், ’காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் திரைப்பட ரசிகர்கள் மனதில் கண்டிப்பாக இடம் பிடிக்கும்.