முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா நடிப்பில் நதியைத்தேடி வந்த கடல் திரைப்படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் V.நடராஜன் இன்று காலை காலமானார்.
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா நடிப்பில் நதியைத்தேடி வந்த கடல் திரைப்படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் V.நடராஜன் இன்று காலை காலமானார்.
சென்னை 01 பிப்ரவரி 2025 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க மகேந்திரன் முதன் முறையாக இயக்கிய முள்ளும் மலரும், R.C.சக்தி இயக்கிய சிறை, பிரபு ரகுவரன் நடிப்பில் K.சுபாஷ் இயக்கி அறிமுகமான கலியுகம், பிரபு நடித்த உத்தம புருஷன், தர்மசீலன், ராஜா கையை வெச்சா. நடிகர் சத்யராஜ் நடித்த பங்காளி. R.V.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் , நடிகர்திலகம் பிரபு இணைந்து நடிக்க டைரக்டர் பாரதிராஜா இயக்கிய பசும்பொன் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா நடிக்க B.லெனின் இயக்கிய நதியைத்தேடி வந்த கடல் போன்ற படங்களை தயாரித்தவர் ஆனந்தி பிலிம்ஸ்V.நடராஜன். உடல் நலம் சரியில்லாமல் இருந்தவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இன்று (1-2 -2025)இரவு 1 மணியளவில் காலமானார்.
இவருக்கு தற்போது வயது 70 இவரது மனைவி பெயர்: ஜோதி வயது – 55 இவருக்கு செந்தில் , விக்கி என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
இன்று மாலை 4 மணியளவில் மைலாப்பூர் ஈடுகாட்டில் இதற்கான இறுதிச்சடங்குகள் நடைபெறவிருக்கிறது.











