’சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, கின்ஸ்லி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அனிஷ் அஷ்ரஃப்.
ஒளிப்பதிவாளர் :- அரவிந்த்.
படத்தொகுப்பாளர் :- விஷால்.
இசையமைப்பாளர் :- ஏ.ஜே.ஆர்.
தயாரிப்பு நிறுவனம் :- சின்னத்தம்பி புரொடக்ஷன்.
தயாரிப்பாளர்கள் :- மகேஸ்வரன் தேவதாஸ், சாண்டி ரவிச்சந்திரன்.
ரேட்டிங் :- 2.5./5.
“சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்” ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர், நிறைந்த திரைப்படம்.
“சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்” புத்திசாலித்தனமான ஒருவரின் உதவியால் ஒரு தொடர்கொலைகளை செய்து கொண்டிருக்கும் குற்றவாளியை காவல்துறை பிடிக்கும் கதையை சுவாரஸ்யமாக இயக்கி இருக்கிறார் அனிஷ் அஷ்ரஃப்..
மதுரையைச் சேர்ந்த கதாநாயகன் வெற்றி, ஒரு புகழ்பெற்ற காலம்சென்ற கிரைம் நாவல் எழுத்தாளரின் மகனான கதாநாயகன் வெற்றி, பத்திரிகை ஒன்றில் தன்னுடைய தந்தையின் வாழ்க்கை பற்றிய தொடராக எழுதுவதற்காக மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வருகிறார்.
சென்னையில் காவல்துறை ஆய்வாளர் தம்பி ராமையாவுடன் கதாநாயகன் வெற்றிக்கு நட்பு ஏற்படுகிறது.
கதாநாயகன் வெற்றியின் துப்பறியும் திறனால் ஈர்க்கப்படும் காவல்துறை ஆய்வாளர் தம்பி ராமையா, தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு பல கொலைகளை துப்பறிவதற்காக கதாநாயகன் வெற்றியை தன்னுடன் வைத்துக் கொள்கிறார்.
இந்த நிலையில், பெண் நிருபர் ஒருவரும், மற்றும் சில பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரியாக கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
இந்த தொடர் கொலைகளின் பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் கதாநாயகன் வெற்றி தொடர் கொலைகளை செய்து கொண்டிருக்கும் அந்த கொலைகாரனை எப்படி கண்டுபிடித்தாரா?, கண்டுபிடிக்கவில்லையா?, தொடர் கொலைகளை செய்து வரும் கொலைகாரன் யார்?,
அந்தக் கொலைகரனை காவல்துறையினர் கைது செய்தார்களா? கைது செய்யவில்லையா? அந்தக் கொலைகளுக்கான பின்னணி என்ன?, என்பதுதான் இந்த ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘சென்னை ஃபைல்ஸ்- முதல் பக்கம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக வெற்றி நடித்திருக்கிறார்.
கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் உள்ள திரைப்படங்களில் கதாநாயகனாக வெற்றி நடித்திருப்பது புதிதல்ல என்றாலும், அவருடைய நடிப்பு இந்த முதல் பக்கம் திரைப்படத்தில் சற்று புதிதாகவும், நல்ல முன்னேற்றமாகவும் உள்ளது.
வழக்கு விசாரணை மற்றும் துப்பறியும் காட்சிகளில் வழக்கமான உடல்மொழியோடு நடித்தாலும், நடனம், ஜாலியாக பேசி நடித்திருப்பது போன்றவற்றால், ஒரே மாதிரியான நடிப்பு என்ற தனது குறையை முற்றிலும் தவிர்த்துவிட்டு, மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இந்த ‘சென்னை ஃபைல்ஸ்- முதல் பக்கம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக சில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சில்பா மஞ்சுநாத் நிருபர் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சில்பா மஞ்சுநாத்க்கு காதல் காட்சிகளும், பாடல் காட்சிகளும் இல்லை. திரைக்கதைக்கு முக்கியத்துவமும் இருக்கும் கதாபாத்திரம் என்றால் அதுவும் இல்லை.
காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா, தனது வழக்கமான மொக்கை உடல்மொழியோடு காமெடி என்ற பெயரில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கொன்று குவிக்கிறார்.
அதன் பிறகு தனது மகளின் இறப்பைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கண் கலங்க வைத்திருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் மகேஷ் தாஸ், ஹல்கின் கடைசி தம்பி போல் தோன்றி மிரட்டுகிறார்.
அதிகம் வசனங்களை பேசாமல் தனது உடல் மொழி மூலம் அனைவரையும் பயமுறுத்த முயற்சித்திருக்கும் மகேஷ் தாஸ், அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நகைச்சுவை தேவை என்பதற்காக தேவையில்லாமல் திணிக்கப்பட்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லியின் கதாபாத்திரம் என்பதால், அவர் வரும் காட்சிகள் அனைத்தும் தேவையில்லாத காட்சிகளாக அமைந்து விட்டது.
ஒளிப்பதிவாளர் அரவிந்தின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஜே.ஆர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்
காவல்துறைக்கு சம்மந்தமே இல்லாத ஒரு நபர், கொலை வழக்கு விசாரணைகளில் இந்த அளவுக்கு தலையிட வைத்திருப்பதை விட, கதாநாயகன் கதாபாத்திரத்தை காவல்துறையில் உள்ள கதாபாத்திரமாகவோ வடிவமைத்திருக்கலாம்.
சைக்கோ திரில்லர் ஜானருடன், சமூக பிரச்சனை பற்றியும் பேசி இருக்கும் இயக்குனர் குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை பதிவு செய்திருக்கும் இயக்குநர் அனிஷ் அஷ்ரப், வாழ்த்துக்கள்.
மொத்தத்தில், ’சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ சமூக பிரச்சனை பற்றியும் பேசி இருக்கும் திரைப்படம்.











