‘வல்லான்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சுந்தர்.சி. தன்யா ஹோப், ஹெபா பட்டேல், கமல் காமராஜ், அபிராமி வெங்கடாசலம், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே. மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- வி.ஆர்.மணி சேயோன்.
ஒளிப்பதிவாளர் :- மணி பெருமாள்.
படத்தொகுப்பாளர் :- தினேஷ் பொன்ராஜ்.
இசையமைப்பாளர் :- சந்தோஷ் தயாநிதி.
தயாரிப்பு நிறுவனம் :- விஆர் டெல்லா பிலிம் பேக்டரி பிரைவேட் லிமிடெட்.
தயாரிப்பாளர்கள் :- டாக்டர் வி.ஆர்.மணிகண்டராமன் & வி.காயத்ரி
ரேட்டிங் :- 2.75./5.
தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் இருக்கும் மிகப்பெரிய தொழிலதிபர் கமல் காமராஜ், கொடூரமாக முறையில் மர்மமான முறையில் கொலை செய்து விடுகிறார்கள்.
தொழிலதிபர் கமல் காமராஜ், கொலை வழக்கை பற்றி விசாரிக்கும் காவல்துறையினர் ஆட்சி மற்றும் தடையங்கள் கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர் கதாநாயகன் சுந்தர்.சி அவர்களிடம் காவல்துறை உயர் அதிகாரி தொழிலதிபர் கமல் காமராஜ், கொலை வழக்கை பற்றி விசாரிப்பதற்காக ஒப்படைக்கிறார்.
காவல்துறை ஆய்வாளர் கதாநாயகன் சுந்தர்.சி பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தாலும் தொழிலதிபர் கமல் காமராஜ், கொலை வழக்கின் பற்றிய பின்னணியில், தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கலாம் என்ற நோக்கத்தில் விசாரணை மேற்கொள்ளும் கதாநாயகன் சுந்தர்.சி, பல மர்ம முடிச்சுகளை அவித்தாலும், அடுத்தடுத்த நடக்கும் கொலைகளால் மேலும் பல மர்மங்கள் காவல்துறை ஆய்வாளர் கதாநாயகன் சுந்தர்.சியை சூழ தொடர்கிறது.
இதற்கிடையே, தொழிலதிபர் கமல் காமராஜ்யிடம் இருக்கும் ஏதோ ஒரு விஷயத்திற்காக அரசியல்வாதி, மற்றும் சில காவல்துறை அதிகாரிகளும் காவல்துறை ஆய்வாளர் கதாநாயகன் சுந்தர்.சி எதிராக சதி திட்டம் தீட்ட, அவைகள் அனைத்தையும் முறியடித்து அந்த கொலையாளியை காவல்துறை ஆய்வாளர் கதாநாயகன் சுந்தர்.சி கொலையாளியை கண்டு பிடித்தாரா ?, கண்டு பிடிக்கவில்லையா?, என்பதுதான் இந்த ‘வல்லான்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த வல்லான் திரைப்படத்தில் கதாநாயகனாக இயக்குனர் சுந்தர் சி நடித்திருக்கிறார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் சுந்தர்.சி, ஆக்ஷன் காட்சிகளிலும், கொலை வழக்கை விசாரிக்கும் காட்சிகளிலும் நேர்த்தியாக நடித்திருந்தாலும், தனது வருங்கால மனைவியின் கொடூர கொலையை பார்த்து கதறும் காட்சியில் நடிப்பின் மூலம் சற்று தடுமாறியிருக்கிறார்.
இந்த வல்லான் திரைப்படத்தில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப் மிகவும் அழகாக இருக்கிறார.
காட்சிகள் மிக குறைவு என்றாலும் அதை மிக நிறைவாக நடித்திருக்கிறார்.
ஹெபா பட்டேல், கவர்ச்சிக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.
இளம் தொழிலதிபராக நடித்திருக்கும் கமல் காமராஜ், அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிராமி வெங்கடாச்சலம், மற்றும் சாந்தினி தமிழரசன், அருள் டி.சங்கர், கோச்சிருக்கதா பத்திரத்தில் தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப் பெரிய அளவில் பங்கு வகித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மணி பெருமாளின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்சிப்படுத்திருப்பது மட்டுமல்லாமல், சண்டை காட்சிகளையும் ரசிக்கும்படி திரைப்படமாக்கியிருக்கிறது.
இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்து இருக்கிறார்
கதைக்கான திரைக்கதையை பல திருப்பங்களுடன், கொலையை சுற்றி நடக்கும் சன்பென்ஸ் திரில்லர் ஜானரை மிக தெளிவாக புரியும்படி
எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் வி.ஆர்.மணி சேயோன்,
மொத்தத்தில், ‘வல்லான்’ கண்டிப்பாக வெல்வான்.











