’அறம் செய்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- பாலு எஸ்.வைத்தியநாதன், அஞ்சனா கீர்த்தி, மேகாலி மீனாட்சி, ஜாக்குவார் தங்கம், லொள்ளு சபா ஜீவா, பயில்வான் ரங்கநாதன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பாலு எஸ்.வைத்தியநாதன்.

ஒளிப்பதிவாளர் :- பாலு எஸ்.வைத்தியநாதன்.

படத்தொகுப்பாளர் :-

இசையமைப்பாளர் :- ஸ்ரீகாந்த் தேவா.

தயாரிப்பு நிறுவனம் :- தாரகை சினிமாஸ்.

தயாரிப்பாளர் :- பாலு எஸ்.வைத்தியநாதன்.

ரேட்டிங் :- 1.5./5.

அரசு மருத்துவ கல்லூரியில் கதாநாயகன் பாலு எஸ் வைத்யநாதன், கதாநாயகி மேகாலி மீனாட்சி மற்றும் லொல்லு சபா ஜீவா இவர்கள் அந்த கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்கள்.

கதாநாயகன் பாலு எஸ் வைத்யநாதன், கதாநாயகி மேகாலி மீனாட்சி மற்றும் லொல்லு சபா ஜீவா
இவர்கள் படித்து வரும் அரசு மருத்துவ கல்லூரியை தனியார் கல்லூரியாக மாற்ற அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

அரசு மருத்துவ கல்லூரியை தனியார் கல்லூரியாக மாற்றக்கூடாது என எதிர்த்து, கதாநாயகன் பாலு எஸ் வைத்யநாதன் மற்றும் அவருடைய நண்பர் லொல்லு சபா ஜீவா கல்வித்துறை அமைச்சரிடம் அரசு மருத்துவக் கல்லூரியில் தனியார் கல்லூரியில் மாற்ற வேண்டாம் என முறையிடுகிறார்கள்.

கதாநாயகன் பாலு எஸ் வைத்யநாதன் மற்றும் அவருடைய நண்பர் லொல்லு சபா ஜீவா இவர்கள் கூறும் விஷயத்தை கல்வித்துறை அமைச்சர் ஏற்க மறுத்து விடுகிறார்.

கதாநாயகன் பாலு எஸ் வைத்யநாதன் அரசை எதிர்த்து , நீதிமன்றத்திற்கு செல்கிறார்

இதனைத்தொடர்ந்து கதாநாயகன் பாலு எஸ் வைத்யநாதன் நண்பர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலரையும் சேர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் தொடங்குகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு கதாநாயகி அஞ்சனா கீர்த்தி தனது குடும்பத்தை விட்டு அரசியலை மாற்ற வேண்டும் எனற தனது இலக்காகக் கொண்டு பயணப்படுகிறார்.

நமது மக்களுக்கு ஆட்சி மாற்றம் மட்டும் போதாது அரசியலிலும் மாற்றம் நடக்க வேண்டும் தன்னோடு பயணிக்கும் நண்பர்களோடு மற்றொரு கதாநாயகி அஞ்சனா கீர்த்தி தமிழக அரசு தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முயற்சிக்கிறார்.

ஒரு பக்கம் கதாநாயகன் பாலு எஸ் வைத்யநாதன் அரசு மருத்துவ கல்லூரியை தனியார் கல்லூரியாக மாற்றக்கூடாது எனவும் மற்றொரு பக்கம் கதாநாயகி அஞ்சனா கீர்த்தி அரசியல் மாற்றம் வேண்டும் என போராடிக் கொண்டிருக்கும் இருவரையும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தலையிட்டு அரசை கவிழ்க்க நினைக்கும் இவர்கள் இருவரையும் தீர்த்துக்கட்ட நினைக்கிறார்கள்.

இவர்கள் இருவர் நினைக்கும் பாதையில் வெற்றி பெற்றார்களா? வெற்றி பெறவில்லையா? ஆளுங்கட்சியினர் இந்த இருவரில் பிரச்சனையை சமாளித்தார்களா? சமாளிக்க வில்லையா? என்பதுதான் இந்த “அறம் செய்” திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த அறம் செய் திரைப்படத்தில் கதாநாயகனாக புதுமுகம் கதாநாயகன் பாலு எஸ் வைத்யநாதன் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் புதுமுகம் கதாநாயகன் பாலு எஸ் வைத்யநாதன் நடிக்க வருவதற்கு முன் இதற்கான நடிப்பு நடனம் சண்டை பயிற்சி இந்த அனைத்து பயிற்சிகளை எடுத்து விட்டு கேமரா முன் நின்று இருக்க வேண்டும்.

இந்த அறம் செய் திரைப்படத்தில் கதாநாயகியாக மேகாலி மீனாட்சி, நடித்திருக்கிறார்.

இந்த அறம் செய் திரைப்படத்திற்கு ஒரு கதாநாயகி தேவை என்பதால் இப்படி ஒரு முதிர்கண்ணியை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த அறம் செய் திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக அஞ்சனா கீர்த்தி நடித்திருக்கிறார்.

அரசியல் மாற்ற வேண்டும் என திரைப்படத்தில் உள்ள மொத்த வசனங்களையும் பேசி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்கிறார்.

லொள்ளு சபா ஜீவா அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக அருமையாக நடித்திருக்கிறார்.

முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜாக்குவார் தங்கம் மற்றும் மற்றும் பயில்வான் ரங்கநாதன் அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அந்த பெண்மணி மற்றும் அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அனைவரும் மிகவும் செயற்கை தனமாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பாலு எஸ்.வைத்தியநாதன் ஒளிப்பதிவு அனைத்தும் சுமாராகவே இருக்கிறது.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமாராக உள்ளது.

அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனரை வெகுவாகவே பாராட்டி விடலாம். என்று நினைத்தால் பாராட்டும் அளவிற்கு இந்த திரைப்படம் இல்லை என்பதுதான் உண்மை.

மொத்தத்தில் இந்த அறம் செய் திரைப்படம் தலைப்பு மட்டுமே அருமை.