நடிகர் சிலம்பரசன் டி ஆர் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியின் ‘#STR 49 ‘ இரண்டு பாகங்களாக தயாராகிறதா..??
நடிகர் சிலம்பரசன் டி ஆர் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியின் ‘#STR 49 ‘ இரண்டு பாகங்களாக தயாராகிறதா..??
சென்னை 18 செப்டம்பர் 2025 நடிகர் சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தேசிய விருது பெற்ற இயக்குநரான வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகும்’ STR 49 ‘படத்தை பற்றிய புதிய தகவல்களை இயக்குநர் வெற்றிமாறன் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இதில் ‘இந்த திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க வேண்டியதிருக்கும்’ என தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில்,
‘STR 49 ‘படத்தின் கதை அமைப்பு ஐந்து முக்கிய எபிசோடுகளை கொண்டிருக்கும். ஒவ்வொன்றும் கதையை முன்னோக்கி நகர்த்துவதில் முக்கியமான பங்களிப்பை கொண்டிருக்கும். இது போன்ற அடுக்கு அணுகுமுறையிலான காட்சிப்படுத்தல்… பார்வையாளர்களுக்கு தீவிரமான மற்றும் ஆழமான சினிமா அனுபவத்தை வழங்கும். அத்துடன் சிலம்பரசனின் சக்தி வாய்ந்த நடிப்பு வெளிப்படுவதற்கான தளத்தையும் இந்த கதைக்களம் வழங்கும்” என்றார்.
இந்த செய்தி- தமிழ் திரைப்படத்துறையிலும், ‘STR 49’ பற்றிய அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெற்றிமாறனின் தனித்துவமான கதை சொல்லல் பாணி – சிலம்பரசனின் காத்திரமான காந்த திரை தோன்றல் என திறமைசாலிகளின் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் வரும் ஆண்டுகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் இது தொடர்பான இயக்குநர் வெற்றிமாறன் பகிர்ந்து கொண்ட பல விசயங்கள் பார்வையாளர்களையும், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் நன்றாக செதுக்கி வடிவமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான முயற்சியாக இருக்கும் என்ற ஆவலையும் ஏற்படுத்தியிருக்கிறது.











