’சக்தித் திருமகன்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் நடிகைகள்:- விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர், சுனில் கிர்பலானி, த்ருப்தி ரவீந்திரன், செல் முருகன், கிரண் குமார், ஷோபா விஸ்வநாத், ரினி, ரியா ஜித்து, மாஸ்டர் கேசவ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அருண் பிரபு.

ஒளிப்பதிவாளர் :- ஷெல்லி ஆர். காலிஸ்ட்.

படத்தொகுப்பாளர் :- ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா & டின்சா.

இசையமைப்பாளர் :- விஜய் ஆண்டனி.

தயாரிப்பு நிறுவனம் :- விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்.

தயாரிப்பாளர் :- பாத்திமா விஜய் ஆண்டனி, மீரா விஜய் ஆண்டனி.

ரேட்டிங் :- 3.75./5.

1989ஆம் காலக்கட்டத்தில் ஒரு பழங்குடிப் பெண் பல பேர் கூட்டாக சேர்ந்து கற்பழித்து தூக்கில் தொங்கவிட, காவல் துறையினர் விசாரணையை தொடங்குகின்றனர்.

அப்போது இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் இருக்கும் தொழிலதிபரின் இந்த கொலையை மறைத்து விடும்படி காவல்துறையினருக்கு அழுத்தம்  கொடுக்கிறார்.

இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் இருக்கும்  தொழிலதிபரின் அழுத்தத்தால் கற்பழிப்பு கொலை வழக்கு திசை மாறுகிறது.

பழங்குடிப் பெண் பல பேர் கூட்டாக சேர்ந்து கற்பழித்து தூக்கில் தொங்கவிட, அந்தப் பெண்ணின் குழந்தை காவல்துறையினரால் குப்பை மேட்டில் வீசப்படுகிறது.

அதன்பிறகு கதாநாயகன் விஜய் ஆண்டனி தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகத்தில்  அலுவலகத்தை சுத்தம் செய்வது அதிகாரிகளுக்கு டீ வாங்கி தருவது என சிறு சிறு வேலைகளை செய்து கொண்டு  அந்த சின்ன வேலையிலிருந்து  தனக்கென்று மிகப் பெரிய  சாம்ராஜ்யம் ஒன்றை உருவாக்குகிறார்.

தமிழகத்தில் உள்ள, அரசாங்கத்தில் நடக்க வேண்டிய அனைத்து வேலைகளும் தமிழக அரசியலில் யாருக்கு எது வேண்டுமானாலும் அரசாங்க வேலைகளில் ஏமாற்றம்  காவல்துறையில் உயர் அதிகாரிகள் இடமாற்றம் பதவி உயர்வு என ஒரு போன் காலிலேயே முடித்து, அதற்கான கமிஷனை வாங்கிக் கொள்வது தான் கதாநாயகன் விஜய் ஆண்டனியின் தொழிலாக செய்து கொண்டிருக்கிறார்.

கதாநாயகன் விஜய் ஆண்டனி செய்யும் தொழில் மூலம் ரூபாய் 6000 கோடிகளுக்கு மேல் சம்பாதித்து பல ஏழை குழந்தைகள் படிக்க வைப்பது ஏழை எளிய மக்களுக்கு நல்லது செய்து வருகிறார்.

ஆனால், பலநாள் திருடன் ஒரு  நாள் அகப்படுவான் என்பது போல் மத்திய அமைச்சர் ஒருவரிடம் கதாநாயகன் விஜய் ஆண்டனி செய்த வேலையால் சிக்கிக் கொள்கிறார்.

அதை தொடர்ந்து அரசியல் சாணக்யன் என்று சொல்லப்படும் ஒருவரிடம் சிக்க, அனைத்து தரப்பிலும் கதாநாயகன் விஜய் ஆண்டனி சுற்றி வளைத்துக் கொள்கிறார்கள்.

அந்த சிக்கலில் இருந்து கதாநாயகன் விஜய் ஆண்டனி சிக்கலில் இருந்து மீண்டாரா?, மீளவில்லையா?, என்பதுதான் இந்த சக்தி திருமகன் திரைப்படத்தின் மீதிக்கதை. 

இந்த சக்தி திருமகன் திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி கிட்டு என்ற கதாபாத்திரத்திற்கும் பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

இந்த சக்தி திருமகன் திரைப்படத்தில் கதாநாயகியாக த்ருப்தி ரவீந்திரன் நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் திருப்தி ரவீந்திரன் திரைப்படத்தில் பெரிய வேலை ஒன்றும் இல்லை என்றாலும், கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். 

கதாநாயகன் விஜய் ஆண்டனி நன்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செல் முருகன், சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கிரண் குமார், ஷோபா விஸ்வநாத், ரியா ஜித்து, வாகை சந்திரசேகர் என மற்ற கதாபாத்திரங்களில்  நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுனில் கிர்பலானி,  அரசியல் நிகழ்வுகளையும், அதன் பின்னணியில் அவருடைய திமிரான பேச்சும், உடல் மொழியும் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆர்.கேலிஸ்ட் ஒளிப்பதிவு மூலம் காட்சிகளுக்கு எது தேவையோ அதை மிக சரியாக பயன்படுத்தி காட்சிகளை அருமையாக திரைப்படமாக்கியிருக்கிறார். 

ஒளிப்பதிவாளர் விஜய் ஆண்டனி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைப்படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறார்.

மத்திய அரசால் அறிவிக்கப்படும் திட்டங்களினால் பால் விலை உயர்வு முதல் தோசை மாவுக்கு போடப்படும் ஜி.எஸ்.டி என சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதும், மிகப்பெரிய பணக்காரர்களும், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர்களும் லாபம் சம்பாதிப்பதும், என ஜனநாயகம் என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் ஆட்சியாளர்களுக்கு எதிராக சாதாரண மக்களை கேள்விகள் கேட்க வேண்டும் என சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு.

மொத்தத்தில், ‘சக்தித் திருமகன்’ சாமானிய மக்கள் அனைவரும்  சிந்திக்க வைத்து கேள்வி கேட்க வைக்கும் திரைப்படம்.

error: Content is protected !!