தீவிர சிகிச்சை பிரிவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா – மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு !!

தீவிர சிகிச்சை பிரிவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா – மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு !!

சென்னை 05 ஜனவரி 2026 சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு வீசிங் போன்ற சுவாச பிரச்சனைகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார்.

அங்கு இயக்குனர் பாரதிராஜாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிவப்பு ரோஜாக்கள்’, ‘கிழக்கு சீமையிலே’, ‘முதல் மரியாதை’, ‘வேதம் புதிது’ என தனது படைப்புகளால் இந்திய திரைப்பட உலகை கவனிக்க வைத்த இயக்குனர் பாரதிராஜா, தனது மகன் மனோஜ் மறைவுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் மனமுடைந்து போனார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவ குழுவினரால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு கடுமையான நுரையீரல் தொற்று இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!