ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் இழுபறியால் நீதிமன்றத்திற்கு செல்லும் படக்குழுவினர்!!
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் இழுபறியால் நீதிமன்றத்திற்கு செல்லும் படக்குழுவினர்!!
சென்னை 05 ஜனவரி 2026 ஜனநாயகன்’ தளபதி நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் இறுதியான திரைப்படம் அவர் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட உலகில் நடிக்கும் இறுதித் திரைப்படம் என்பதால் இந்த ஜனநாயகன் உலகளவில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த ஜனநாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் இதுவரை வெளியான நான்கு பாடல்களும் மிகப்பெரிய அளவில் செம ஹிட். குறிப்பாக தளபதி கச்சேரி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி இருக்கிறது.
ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட, டிரெய்லரில் தளபதி விஜய்யின் அரசியல் வருகை உறுதி செய்யப்படும் அளவிற்கு மறைமுகமான வசனங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது வரை தணிக்கை குழுவினர் விஜய் நடிப்பில் வெளிவர உள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை
கடந்த டிசம்பர் 19 2025 அன்று திரைப்படத்தை தணிக்கை குழுவினர் பார்வைக்கு அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தணிக்கை குழுவினரால் சில காட்சிகளில் உள்ள வசனங்கள் பரிந்துரைத்த மாற்றங்கள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டு மீண்டும் திரைப்படம் தணிக்கை குழுவினரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், இன்று வரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதனால் படக்குழுவினர் நீதிமன்றத்தை நாட ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறியால், திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்க்கு முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், அரசியல் உள்நோக்கத்தோடு திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கத் தடை ஏற்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர உள்ள பராசக்தி திரைப்படத்திற்கு U/A தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.










