சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

சென்னை 29 ஜூலை 2021

சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

காதல் பகடை, வாணி ராணி உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான வேணு அரவிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் வேணு அரவிந்த்.

இவர் கே.பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் ஆகிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.

மேலும் வாணி ராணி, சந்திரகுமாரி உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

தற்போது இவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்ததாலும், மூளையில் கட்டி வந்து அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாலும், கோமா நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

விரைவில் குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும்.

இந்த தகவலை அறிந்த சின்னத்திரை நடிகர்கள் பலரும் வேணு அரவிந்த் குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

error: Content is protected !!