‘HAPPYRAJ’ ‘ஹேப்பிராஜ்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ஜிவி பிரகாஷ் குமார், கெளரி ப்ரியா , அப்பாஸ் , ஜார்ஜ் மரியான், கீதா கைலாசம், அதிர்ச்சி அருண், மதுரை முத்து, தேவி மகேஷ்,  ப்ரார்த்தனா, சோஃபா பாய் ரசூல், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மரியா ராஜா இளஞ்செழியன்.

ஒளிப்பதிவாளர் :- மதன் கிரிஸ்டோபர்.

படத்தொகுப்பாளர் :- ஆர்.கே. செல்வா.

இசையமைப்பாளர் :- ஜஸ்டின் பிரபாகரன்.

தயாரிப்பு நிறுவனம் :- பியாண்ட் பிக்ச்சர்ஸ்.

தயாரிப்பாளர் :- ஜெய்வர்தா, ஜெய்காந்த் சுரேஷ்.

மக்கள் தொடர்பு :- ரேகா.

ரேட்டிங் :- 3.5./5

கோயமுத்தூரில் ஆசிரியர் பணி செய்து கொண்டிருக்கும் ஜார்ஜ் மரியன் மனைவி கீதா கைலாசம் பல வருட காத்திருப்புகளுக்கு பின் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது.

ஆசிரியரான ஜார்ஜ் மரியனை குதிரை முட்டை’ வாத்தியார் என ஊரே கேலி செய்ய ஜார்ஜ் மரியனுக்கு பிறக்கும் குழந்தைக்கு ஹாப்பி என்கிற ஆனந்த் ராஜ் என பெயர் வைத்து தனது மகனை ராஜா போலவே வாழ்த்து வருகிறார்.

ஆனால், தனது தந்தையை குதிரை முட்டை என கிண்டல் செய்த ஊர் மக்கள் கதாநாயகன் ஜி வி பிரகாஷ் குமார் சின்ன குதிரை முட்டை என அனைவரும் கிண்டல் செய்ய ஆரம்பிக்கின்றனர்.

இதனால், கதாநாயகன் ஜி வி பிரகாஷ் குமார் அந்த ஊரில் எந்த ஒரு பெண்ணும் குதிரை முட்டை வாத்தியாரின் மகன் என்பதால் காதலும் கை கூட வில்லை.

பிரார்த்தனா நாதனிடம் கதாநாயகன் ஜி வி பிரகாஷ் குமார் தனது காதலை சொல்ல  நீ குதிரை முட்டை வாத்தியார் மகன் என்பதால் உன்னை நான் காதலிக்க முடியாது எனறு சொல்லி கதாநாயகன் ஜி வி பிரகாஷ் குமாரின் காதலை புறக்கணிக்கிறார்.

இந்த ஊரே வேண்டாம் வேற ஏதாவது ஊரில் வேலைக்குச் சேர்ந்து அங்கே ஒரு அழகான ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்கிற  லட்சியத்தில் பெங்களூரில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை கிடைக்க பெங்களூருக்கு செல்லும் கதாநாயகன் ஜி வி பிரகாஷ் குமார் அங்கே கதாநாயகி ஸ்ரீகெளரி ப்ரியாவை சந்திக்கிறார்.

கதாநாயகன் ஜி வி பிரகாஷ் குமார் மற்றும் கதாநாயகி ஸ்ரீகெளரி ப்ரியா இருவருக்கும் காதல் மலர்கிறது .

அந்த காதலுக்கு இருவரின் கதாநாயகன் ஜி வி பிரகாஷ் குமார்  தந்தை ஜார்ஜ் மரியான் மற்றும் கதாநாயகி ஸ்ரீகெளரி ப்ரியாவின் தந்தை அப்பாஸ் ஈகோ பிரச்சனை இருப்பதால் இருவரின் தந்தைகளின் சமாளித்து கடைசியில் கதாநாயகன் ஜி வி பிரகாஷ் குமார் மற்றும் கதாநாயகி ஸ்ரீகெளரி ப்ரியா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா?, ஒன்று சேரவில்லையா?, என்பதுதான் இந்த ‘ஹேப்பிராஜ்’ திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக ஜிவி பிரகாஷ் குமார் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த திரைப்படத்தில் ஹாப்பி ராஜாக மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

முதல் காட்சிகளில் இருந்து பாதி திரைப்படம் வரை அவரது அலப்பறைகள் அனைத்தும் அற்புதமே.

ஆனால், கதாநாயகனாக நடித்திருக்கும் ஜி.வி. பிரகாஷ் குமாரின் அலப்பறையாண நடிப்பு ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

திரைப்படத்தின் முதல் பாதியில் அதிகளவில் காமெடி காட்சிகள் வைக்கப்பட்டாலும் அவை ரசிகர்களிடம் பெரிதாக சிரிப்பை ஏற்படுத்தவில்லை.

இந்த ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீகெளரி ப்ரியா நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீகெளரி ப்ரியா தான் நடிப்பு மூலம் முதல் பாதி திரைப்படத்தை பார்க்க வைக்க உதவுகிறார்.

கதாநாயகி ஸ்ரீகெளரி ப்ரியா தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அப்பாஸ் ஓபனிங் சீன் சிறப்பாக உள்ள நிலையில் திரைப்படம் முழுவதும் அப்பாஸில் நடிப்பு சிறப்பு .

கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான் சிறப்பான நடிப்பை கொடுத்து திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமாரின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம் பெங்களூருக்குச் சென்று செய்யும் அலப்பறைகளும் அந்த “மலை மலை மருதமலை” பாடல் காட்சியில் மிக மிக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதாநாயகன் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மதுரை முத்து, மற்றும் அதிர்ச்சி அருண், இருவரும் இணைந்து மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைவரும் தேவி மகேஷ்,  ப்ரார்த்தனா, சோஃபா பாய் ரசூல், அனைத்து நடிகர்களின் நடிப்பு மொத்தமும் திரைப்படத்துக்கு பெரிய பிளஸ் ஆகவே உள்ளது.

ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர்  ஒளிப்பதிவு மூலம் பெங்களூர் மற்றும் கோவை அழகை அழகாக மொத்த திரைப்படத்தையும் கலர்ஃபுல்லாக கொடுத்துள்ளார்.

ஒரு போட்டோ எடுக்கும் ஷாட்டில் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் எதிர் எதிர் திசையில் அமர்ந்திருக்கும் காட்சி மிகவும் அழகு.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் “ஆடினே இருப்பேன்” பாடல் வைப் ஆக்குகிறது.

பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்துள்ளது.

தற்போது இருக்கும் சமுதாயத்தில் யாரும் யாருக்கும் குறைந்தவன் இல்லை என்ற கருத்தை மிகவும் ஆழமாக சொல்லி, குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் மரியா ராஜா இளஞ்செழியன்.

மொத்தத்தில், இந்த ஹேப்பிராஜ் திரைப்படம் கமர்ஷியலாக வெற்றி  பெறுவதற்கான அனைத்து அம்சங்களும்  உள்ளன.

error: Content is protected !!