‘சரீரம்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- தர்ஷன், சார்மி விஜயலட்சுமி, ஜே.மனோஜ், பாய்ஸ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, மிலா, ஜி.வி. பெருமாள் மலைச்சாமி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஜி.வி. பெருமாள்.
ஒளிப்பதிவாளர் :- கே. டோர்னாலா பாஸ்கர், பரணி குமார்.
படத்தொகுப்பாளர் :- லக்ஷ்மன்.
இசையமைப்பாளர் :- வி.டி. பாரதிராஜா.
தயாரிப்பு நிறுவனம் :- ஜிவிபி பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் :- ஜி.வி.பி. பார்வதி
ரேட்டிங் :- 2.5./5.
கதாநாயகன் தர்ஷன் பிரியன் மற்றும் கதாநாயகி சார்மி விஜயலெட்சுமி இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் இவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.
கதாநாயகன் தர்ஷன் பிரியன் மற்றும் கதாநாயகி சார்மி விஜயலெட்சுமி இருவரின் காதல் உயிருக்கு உயிராக காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இருவரும் உயிருக்கு உயிராக காதலித்துக் கொண்டிருக்கும் நிலையில் கதாநாயகி சார்மி விஜய் லெட்சுமியின் தந்தை மிகப்பெரிய கோடீஸ்வரரான
ஜே.மனோஜ் இவர்கள் இருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவப்புக் கொடி காட்டுகிறார்.
இந்த நிலையில் கதாநாயகி சார்மி விஜய் லெட்சுமியின் தாய்மாமன் மனோஜ் தன்னுடைய முறைப் பெண்ணை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வெறியுடன் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஒருகட்டத்தில் கதாநாயகி சார்மி விஜய் லெட்சுமியின் தாய்மாமன் மனோஜ் கதாநாயகன் தர்ஷன் பிரியனை அடித்து ஆற்றில் வீசுகிறார்.
கதாநாயகி சார்மி விஜய் லெட்சுமி தன் காதலன் கதாநாயகன் தர்ஷன் பிரியன் இறந்துவிட்டான் என நினைத்து கதாநாயகி சார்மி விஜய் லெட்சுமி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்.
கதாநாயகன் தர்ஷன் பிரியன் மற்றும் கதாநாயகி சார்மி விஜயலெட்சுமி இருவரும் உயிர்பிழைத்து இவர்கள் எடுக்கும் முடிவு மிகவும் விபரீதமாக மாறும் நிலையில் பெற்றோருக்குப் பயந்து ஓடிக்கொண்டே இருக்கும் இவர்கள் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்ளும் முடிவுக்கு வருகிறார்கள்.
இவர்கள் தங்கள் பாலினத்தில் இருந்து மாறினார்களா? மாறவில்லையா?
கதாநாயகன் தர்ஷன் பிரியன் மற்றும் கதாநாயகி சார்மி விஜயலெட்சுமி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? ஒன்று சேரவில்லையா?
என்பதுதான் இந்த “சரீரம்” திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த சரீரம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுக நடிகர் தர்ஷன் பிரியன் நடித்திருக்கிறார்.
அறிமுக நடிகர் தர்ஷன் பிரியன் காதல் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளில், அனைத்தும் காட்சிகளில் நடிப்பு எதார்த்தமாக நடித்திருக்கிறார்.
இந்த சரீரம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுக நடிகை சார்மி விஜயலெட்சுமி நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சர்மி விஜயலட்சுமி, அனைத்து காட்சிகளிலும் எளிமையான அழகோடு, எதார்த்தமாக நடிப்பை கொடுத்து கவனம் ஈர்க்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜே.மனோஜ், எப்போது பார்த்தாலும் முரட்டுப் பார்வையுடன் வருகிறார்.
புதுப்பேட்டை சுரேஷ், மீட்டரைத் தாண்டாமல் நடித்திருக்கிறார்.
தந்தை கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இயக்குநர் ஜிவி பெருமாள், தாறுமாறான காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் அதிரடி காட்டுகிறார்.
மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷகிலா பாய்ஸ் ராஜன், மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, மிலா, மலைச்சாமி திரைப்படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் நடித்திருப்பவர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
ஒளிப்பதிவாளர்கள் டோர்னாலா பாஸ்கர், பரணி குமார் இருவரின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் வி.டி. பாரதிராஜா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘சரீரம்’ திரைப்படம் வித்தியாசமான காதல் கதை,











