‘திவ்யா’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ஆர்.ஜே.பி, கேத்தி, செந்தில், பவுன்ராஜ், அனந்த் ராம், கலாவதி, சபி, ஜிவி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- .ஆர்.ஜே.பி.
ஒளிப்பதிவாளர் :- ஜெயக்குமார், செல்வகுமார்.
படத்தொகுப்பாளர் :- வளர்பாண்டி.
இசையமைப்பாளர் :- சங்கர் ராய்.
தயாரிப்பு நிறுவனம் :- .ஆர்.ஜே.பி. மிடியா புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- .கலா ரவி.
.
மக்கள் தொடர்பு :- சேலம் சரண்
ரேட்டிங் :- 2.5../5.
தாய் தந்தை இல்லாமல் தனது தம்பி மற்றும் தாத்தாவின் அரவணைப்பின் சாவு நிகழ்ச்சிகளில் தப்பு அடித்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் கதாநாயகன் ஆர்.ஜே.பி, மற்றும் அறநிலைத்துறையில் அதிகாரியாக இருக்கும் அனந்த் ராமின் ஒரே மகள் கதாநாயகி கேத்தி கதாநாயகன் ஆர்.ஜே.பி, இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.
கதாநாயகி கேத்தியின் தந்தை அனந்த் ராமுக்கு இவர்கள் இருவரின் காதல் விவகாரம் தெரிய வருகிறது.
கதாநாயகன் ஆர்.ஜே.பி கீழ் சாதியை சேர்ந்தவர் என்பதால், தனது மகள் கதாநாயகி கேத்தி படிக்கும் படிப்பை நிறுத்திவிட்டு உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதற்கான அவசரம் அவசரமாக பெற்றோர்கள் ஏற்பாடுகளை செய்கிறார்கள்.
இந்த நிலையில், கதாநாயகன் ஆர்.ஜே.பி, மற்றும் கதாநாயகி கேத்தி, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் சபி, ஜிவி இருவர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுக்கிறார்கள்.
அதன்படி நண்பர்கள் சபி, ஜிவி உதவியுடன் வீட்டை விட்டு வெளியேறும் கதாநாயகன் ஆர்.ஜே.பி, மற்றும் கதாநாயகி கேத்தி இருவரும் காதலில் வெற்றி பெற்றார்களா, வெற்றி பெறவில்லையா?, பெற்றோர்களின் ஜாதி வெறி கௌரவம் வெற்றி பெற்றதா?, என்பதுதான் இந்த ‘திவ்யா’ திரைப்படத்தின் மீதிக்கதை
இந்த ‘திவ்யா’ திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக ஆர்.ஜே.பி நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்.ஜே.பி, தன்னுடைய அளவான மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இவருடைய நடிப்பை பார்த்தால் இயக்குனர் தினந்தோறும் நாகராஜ் அவர்களை ஞாபகப்படுத்துகிறது.
ஆர்.ஜே.பி ஒரு நடிகராக திரைப்படத்திற்கு மிகவும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த ‘திவ்யா’ திரைப்படத்தில் புதுமுக கதாநாயகியாக கேத்தி நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் கேத்தி, நமது பக்கத்து வீட்டில் உள்ள பெண் போல் எளிமையான தோற்றத்திலும், அளவான நடிப்பிலும் தங்களுடைய காதல் விவகாரம் தனது தந்தைக்கு தெரிந்த பிறகு அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், இறுதியில் கதாநாயகி கேத்திக்கு இழைக்கப்படும் அநீதி திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களை கண் கலங்க வைத்திருக்கிறார்.
கதாநாயகி தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனந்த் ராம், தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலாவதி, கதாநாயகன் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவுன்ராஜ், நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சபி மற்றும் ஜிவி, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செந்தில் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் புதிய முகங்கள் என்றாலும், தங்களது சிறப்பான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார், செல்வகுமார், ஒளிப்பதிவு மூலம் மக்களும் மண் சார்ந்த மனிதர்கள் இயல்பு தன்மையோடு மாறாமல் காட்சிப்படுத்தி, திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் சங்கர் ராம் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்களத்திற்கு ஏற்றவாறு பயணிக்கவில்லை.
சாதி பாகுபாடு பற்றி எந்தவிதமான பிரசாரத்தையும் மேற்கொள்ளாமல், குடும்ப விசயத்தில் பிறர் தலையிட்டால் என்ன நடக்கும் என்பதை மட்டும் அழுத்தமாக பதிவு செய்து சாதி வெறி பிடித்த பெற்ரோரின் கண்களை எப்படியெல்லாம் மறைக்கிறது.
சாதி வெறி பிடித்த பெற்றோர்களின் மனதை கல்லாக்குவது எப்படி? என்பதற்கான விளக்கத்தை சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஆர்.ஜே.பி.
மொத்தத்தில், ‘திவ்யா’ சாதி வெறி உள்ள எத்தனை திரைப்படங்கள் வந்தாலும், எத்தகைய போராட்டங்களை நடத்தினாலும், ஆணவப் படுகொலைகளின் அரங்கேரி கொண்டு தான் இருக்கிறது.











