‘ரெட்ரோ’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், விது, கருணாகரன். சிங்கம் புலி, தமிழ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கார்த்திக் சுப்புராஜ்.

ஒளிப்பதிவாளர் :- ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.

படத்தொகுப்பாளர் :- ஷபீக் முகமது அலி.

இசையமைப்பாளர் :- சந்தோஷ் நாராயணன்

தயாரிப்பு நிறுவனம் :- 2டி என்டர்டெயின்மென்ட் & ஸ்டோன் பெஞ்ச்.

தயாரிப்பாளர் :- ஜோதிகா – சூர்யா
கார்த்திக் சுப்புராஜ்.

ரேட்டிங்:- 4./5.

சட்டவிரோத செயல்களை செய்துவரும் ஜோஜு ஜார்ஜ் மிகப்பெரிய தாதாவாக வளம் வந்து ஜோஜு ஜார்ஜ் தாய், தந்தை இல்லாத கதாநாயகன் சூர்யாவை வளர்த்து வருகிறார்.

தனது காதலி கதாநாயகி பூஜா ஹெக்டேவுக்காக வெட்டு குத்து அடிதடியை விட்டுவிடுவதாக கதாநாயகன் சூர்யா கதாநாயகி பூஜா ஹெக்டேவிடம் உறுதி கூறுகிறார்.

தனது காதலி கதாநாயகி பூஜா ஹெக்டேவை கதாநாயகன் சூர்யா திருமணம் செய்து கொண்டு அமைதியாக வாழ வேண்டும் என விரும்புகிறார்.

ஆனால், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனது காதலி கதாநாயகி பூஜா ஹெக்டேவிறகாக தனது வளர்ப்பு தந்தையின் கையை துண்டாக வெட்டி விட, அவரது தந்தையின் ஆட்களையும் கொலை செய்து விடுகிறார்.

இதனால், கதாநாயகன் சூர்யாவிடம் இருந்து இருந்து கதாநாயகி பூஜா ஹெக்டே தனது காதலில் இருந்து விலகிச் சென்று விடுகிறார்.

ஆனால் கதாநாயகன் சூர்யா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

கதாநாயகி பூஜா ஹெக்டே அந்தமானில் இருக்கும் தகவல் கதாநாயகன் சூர்யாவுக்கு தெரிய வர கதாநாயகி பூஜா ஹெக்டேவை சமாதானப்படுத்தி அவர் விரும்பியது போல், அடிதடி இல்லாத அமைதியான புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக அந்தமான் செல்லும் கதாஙசூர்யாவுக்கு, அங்கே மிகப்பெரிய பொறுப்பும், யுத்தமும் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கதாநாயகன் சூர்யாவின் வாழ்க்கை என்னவானது?, கதாநாயகி பூஜா ஹெக்டேவை சமாதானப்படுத்தி கதாநாயகன் சூர்யா இருவரும் இணைந்தார்களா? இணையவில்லையா? என்பதுதான் இந்த ‘ரெட்ரோ’ ரெட் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த மெட்ரோ திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யா நடித்திருக்கிறார்.

தன்னை வளர்க்கும் தந்தையாக இருந்தாலும், அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் துணிச்சல் மிக்க மகனாகவும், காதல் தோல்வியால் இது வந்து போகும் காதலனாகவும் அதன், பிறகு தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக போரிடும் போராளியாகவும், என ஒரே கதாபாத்திரத்திற்கு சூர்யாவின் நடிப்பின் மூலம் சிரிக்காமலேயே நடனம் ஆடுவது, ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டைலிஷாக கையாள்வது என்று திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை காட்சிக்கு காட்சி ரசிக்க வைத்திருக்கிறார்.

இந்த மெட்ரோ திரைப்படத்தில் கதாநாயகியாக ஹெக்டே, நடித்துள்ளார்.

கதாநாயகி பூஜா ஹெக்டே, கதையின் மையப்புள்ளியாகவும், கதையை நகர்த்திச் செல்லும் வழக்கமான கதாநாயகியாக அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

கதாநாயகன் சூர்யா தந்தை மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் தனது இயல்பான நடிப்பை கொடுத்து தமிழ் திரைப்பட ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.

கிங் மைக்கல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக எந்த ஒரு குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, மூலம் திரைப்படத்தை மிகநேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளை மிக ஸ்டைலிஷாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் பின்னணி இசை மற்றும் பீஜியம்கள் திரைப்பட ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது.

ரெட்ரோ காலக்கட்ட உலகை திரைப்படம் பார்க்கணும் ரசிகர்கள் கண் முன் நிறுத்தியிருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்.

மொத்தத்தில், – ‘ரெட்ரோ’ திரைப்படம் ரெட்ரோ காலக்கட்ட ஆக்சன் திருவிழா.

error: Content is protected !!