‘மாஸ்க் ‘ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- கவின், ஆண்ட்ரியா ஜெரமையா, ருஹாணி ஷர்மா, சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக், ரெடின் கிங்ஸ்லீ, பவன், ஆடுகளம் நரேன், சுப்ரமணியம் சிவா, ரோகித் டெனிஸ், வெங்கட் பேட்டரி, மகாலட்சுமி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- விகர்ணன் அசோக்.
ஒளிப்பதிவாளர் :- RD ராஜசேகர்.
படத்தொகுப்பாளர் :- R ராமர்.
இசையமைப்பாளர் :- ஜி.வி. பிரகாஷ் குமார்.
தயாரிப்பு நிறுவனம் :- : தி ஷோ மஸ்ட் கோ ஆன் ( TSMGO ) & பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் .
தயாரிப்பாளர்கள் :- ஆண்ட்ரியா ஜெரமையா & SP. சொக்கலிங்கம்.
ரேட்டிங் :- 2.5./5.
தனியார் துப்பறியும் நிபுணர் (பிரைவேட் டிடெக்டிவ்) என்ற பெயரில் கதாநாயகன் கவின் பலரை ஏமாற்றி பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்.
அதேபோல் பெண்கள் பாதுகாப்பு, சமூக ஆர்வலர் என்ற பெயரில் கதாநாயகி ஆண்ட்ரியா தவறான செயல்கள் மற்றும் விபச்சாரம் செய்து கொண்டு சம்பாதித்து வருகிறார்.
இந்த நிலையில் அரசியல்வாதியான வில்லன் பவன், தேர்தலுக்காக வாக்குகள் பெறுவதற்காக தொகுதி மக்களுக்கு கொடுக்க வேண்டிய 440 கோடி ரூபாய் பணத்தை கதாநாயகி ஆண்ட்ரியாவிடம் கொடுத்து தொகுதி வாரியாக கொடுக்க வேண்டும் என கதாநாயகி ஆண்ட்ரியாவிடம் 4 440 கோடியை ஒப்படைக்கிறார்.
அரசியல்வாதியான வில்லன் பவன் கொடுத்த அந்த 440 கோடி ரூபாய் பணத்தை ஆண்ட்ரியா தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் பதுக்கி வைக்கிறார்.
அரசியல்வாதியான வில்லன் பவன் கொடுத்த அந்த 440 கோடி ரூபாய் பணத்தை மாஸ்க் அணிந்த சிலர் கொள்ளை அடித்து விடுகிறார்கள்.
கதாநாயகி ஆண்ட்ரியா பணத்தை தேடும் பணியை கதாநாயகன் கவினிடம் கொடுக்கிறார்.
இறுதியில் அந்த 440 கோடி பணத்தை கொள்ளை அடித்தவர்கள் யார்?, அந்த 440 கோடி ரூபாய் பணத்தை கதாநாயகன் கவின் கண்டுபிடித்தாரா? கண்டு பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த மாஸ்க் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த மாஸ்க் திரைப்படத்தில் கதாநாயகனாக கவின் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் கவின், எதார்த்தமாக நடிக்க முயற்சி செய்து ஒரு சில காட்சிகளில் மட்டும் கவனிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்து இருக்கிறார்.
இந்த மாஸ்க் திரைப்படத்தில் கதாநாயகியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார்
கதாநாயகியாக நடித்திருக்கும் ஆண்ட்ரியா, பார்வையிலேயே இவரது வில்லத்தனமான நடிப்பை கொடுத்து மிரட்டி இருக்கிறார்.
ருஹானி சர்மா அருமையான நடிப்பை கொடுத்து அழகாக வந்து சென்று இருக்கிறார்.
அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்
சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக், ரெடின் கிங்ஸ்லீ ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தின் கதையோடு சிறப்பாக பயணித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
டார்க் காமெடி ஜானரில் திரைப்படத்தில் பெரியதாக டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை.
ஒரே இடத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் அதே இடத்தில் கொடுக்க வைப்பதை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விகர்ணன் அசோக்.
மொத்தத்தில் ‘மாஸ்க்’ திரைப்படம் திரையரங்குகளில் சென்று கண்டிப்பாக பார்க்கலாம்.











