‘Lik’ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்பட விமர்சனம் .

நடிகர் & நடிகைகள் :- பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, சீமான், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, கௌரி ஜி கிஷன், ஷாரா, ஆனந்தராஜ்,  மாளவிகா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- விக்னேஷ் சிவன்.

ஒளிப்பதிவாளர் :- ரவி வர்மன் ASC ISC.

படத்தொகுப்பாளர் :- பிரதீப் இ ராகவ்.

இசையமைப்பாளர் :- அனிருத்.

தயாரிப்பு நிறுவனம் :- ரவுடி பிச்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ.

தயாரிப்பாளர் :- நயன்தாரா,
எஸ்.எஸ்.லலித் குமார் .

மக்கள் தொடர்பு :-

ரேட்டிங் :- 2.5../5

காதலித்து திருமணம் செய்து கொண்ட எஸ்.ஜெ.சூர்யா, திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியால், இனி எந்த ஒரு காதல் ஜோடிகளுக்கும் இத்தகைய நிலை ஏற்பட கூடாது என்பதற்காக, பல வருட  உழைப்பிற்குப் பின் 2040 ஆம் ஆண்டில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany – LIK) என்ற பெயரில் ஒரு செயலி ஒன்றை உருவாக்குகிறார்.

இந்த LIK செயலி மூலம் தங்களுக்கு பொறுத்தமான காதல் ஜோடியை தேர்வு செய்வது முதல், அவர்கள் எங்கே, என்ன செய்துக் கொண்டிருக்கிறார் எங்கெல்லாம் சொல்கிறார்கள் என்பது வரை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதோடு, 24 மணி நேரமும் அவர்களை கேமரா மூலம் கண்காணிக்கவும் செய்யும் இந்த LIK செயலி

இதனால், இந்த LIK செயலி மூலம் காதலித்துக் கொண்டிருக்கும் காதலர்களில் யார் ஏமாற்றினாலும், அது அவர்களுக்கு தெரிந்து  கொள்வதோடு, காதலர்கள் பிரிய நினைத்தால் இழப்பீடு வாங்கிக் கொடுத்து அதை நிறைவேற்றுகிறது இந்த LIK  செயலி. காதலர்களிடம் மட்டும் இன்றி, தம்பதிகளிடமும் பெரும் வரவேற்பு பெற்று வரும் LIK செயலியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் ஒரு வாடிக்கையாளரான கதாநாயகி கிரித்தி ஷெட்டி, தனது சிறு வயது முதலே ஸ்மார்ட்போனின் வழிகாட்டுதலின் மூலம் வளர்வதால், சமூக ஊடகங்களில் அதிக பின்தொடர்பவர்களை பெறுவதற்கான எந்த நேரமும் அதே முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.

ஸ்மார்ட்போன்கள் மூலம் தங்களுக்கே தெரியாமல் தவறு செய்பவர்களை திருத்துவதற்காக பசுமை உலகம் என்ற எந்த ஒரு தொழில்நுட்ப வசதிகள் இல்லாத ஒரு இடத்தை உருவாக்கி கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனின் தந்தை சீமான் நடத்தி வருகிறார்

கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன், தனது தந்தை சீமான் வழிகாட்டுதலின்படி ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத ஒரு நபராக வாழ்ந்து வருகிறார்.

 இதற்கிடையே, கதாநாயகி கிரித்தி ஷெட்டியை கண்டதும் காதல்  கொள்கிறார்  கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன், அவருக்காக தன்  தந்தை சீமானுக்கு தெரியாமல்  ஸ்மார்ட்போன் வாங்குவதோடு, மட்டுமல்லாமல் அதன் மூலம் LIK செயலியில் தன்னை இணைத்துக் கொண்டு கதாநாயகி கிரித்தி ஷெட்டியுடன் தொடர்பையும் ஏற்படுத்தி கொண்டு நட்பாக பழகுகிறார்.

கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகி கீரித்தி ஷெட்டியுடன்  நட்பாக பழகி காதலாக மாறும்போது, எந்த LIK செயலி அவர்களை சேர்த்து  வைப்பதற்காக அந்த   LIK செயலி மூலம் மதிப்பெண் பார்க்கும் போது அதே LIK செயலி  தவறான  தகவலை கொடுக்க  கதாநாயகி கிரித்தி ஷெட்டி கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் உடன் இருந்த காதலை முறித்துக் கொண்டு  இருவரும் பிரிந்து விடுகிறார்.

கதாநாயகி கீரித்தி ஷெட்டி காதல் முறிந்ததால்,  கடும்கோபம் அடையும் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன், தன் இதயத்தில் இருக்கும் கதாநாயகன் கிரித்தி ஷெட்டி மீதான காதலை தவறான தகவல்கள் மூலம் குறைத்து மதிப்பிட்ட LIK  செயலி போலியானது என்பதை கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் நிரூபிக்க முடிவு செய்கிறார்.

ஆனால், தன் LIK செயலியின் தகவல்கள் சரியானது என்று வாதிடும் வில்லன் எஸ்.ஜெ.சூர்யா, 30 நாட்களுக்குள் கதாநாயகி கிரித்தி ஷெட்டியை காதலிக்க வைத்து விட்டால், தன் செயலி தவறு என்பதை ஏற்றுக் கொள்வதாகவும், கதாநாயகி கிரித்தி ஷெட்டி உன்னை காதலிக்கவில்லை என்றால் தனது LIKசெயலி சிறந்தது என்பதை ஏற்றுக்கொண்டு அதை உலகிற்கு அறிவிக்க வேண்டும், என கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனுக்கு வில்லன் எஸ்.ஜெ.சூர்யா, சவால் விடுகிறார்.

வில்லன் எஸ்.ஜெ.சூர்யா, கூறும் சவாலை ஏற்றுக்கொள்ளும் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன், அதில் வெற்றி பெற்றாரா?,  இல்லை வெற்றி பெறவில்லையா?,  என்பதுதான் இந்த ‘Lik’ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘Lik’ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில்   கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் வழக்கம் போல் தான் ஏற்றிருக்கும்  கதாபாத்திரத்திற்கு தனது தனித்துவமான மேனரிசம் கலந்த நடிப்பின் மூலம் மிகப்பெரிய அளவில் சிறப்பு  சேர்த்திருக்கிறார்.

கதாநாயகி கிரித்தி ஷெட்டியை பார்த்தவுடன் காதல் என்றாலும், தன்னுடைய காதலி கதாநாயகி கிரித்தி ஷெட்டி மீது தான் வைத்திருக்கும் அன்பை அவர் வெளிக்காட்டும் காட்சிகள் மற்றும் தனது காதலி கதாநாயகி கிரித்தி ஷெட்டி தன்னை விட்டு பிரிந்து சென்ற பிறகு காதல் வலியை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், தனது காதல் உண்மையானது என்பதை  தன்னம்பிக்கையோடு போராடும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருப்பதோடு,   தன்னுடைய ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார்.

இந்த ‘Lik’ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில்  கிரித்தி ஷெட்டி கதாநாயகியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் கிரித்தி ஷெட்டி, அதிகப்படியான மேக்கப்போடு வலம் வந்தாலும் மிகவும் அழகாகவே இருக்கிறது.

கதாநாயகி கிரித்தி ஷெட்டியின் மேக்கப் மற்றும் ஆடை வடிவமைப்பு அவரை  பாபி டால் பொம்மையாக வலம் வர செய்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

Lik’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) செயலியின் நிறுவனர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜெ.சூர்யா, தனது வழக்கமான பாணியில் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை மட்டுமே கொடுத்து திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனின் தந்தை கதாபாத்திரத்தில் அன்பு கடல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சீமான், தன் இயல்பான உணர்வுகளை நடிப்பாக வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்.

தோற்றத்தில் மட்டுமே வித்தியாசத்தை காட்டியிருக்கும் யோகி பாபு, நடிப்பிலும், நகைச்சுவையிலும் எந்த விதமான மாற்றத்தையும் வித்தியாசத்தை காட்டவில்லை.

கெளரி கிஷன் முதல் முறையாக கவர்ச்சியான உடைகளோடு  வரும்  ரசிகர்கள் இடையை தாக்கம் ஏற்படுத்தாத கதாபாத்திரத்தில் வலம் வருகிறார்.

கதாநாயகன் பிரதீப் ரங்கநாதனின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாரா கொடுத்த வேலையை எந்தவிதமான குறையின்றி சிறப்பாக செய்திருக்கிறார்.

கதாநாயகிகிரித்தி ஷெட்டி அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் மாளவிகா, வில்லன்
எஸ் ஜே சூர்யாவின்  உதவியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆனந்தராஜ், சுனில் ரெட்டி ஆகியோர் கொடுத்த கதாபாத்திரத்தை குறைவு இல்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரவி வர்மனின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்காக பிரமாண்டமான  காட்சிப்படுத்தப்பட்டு ரசிகர்கள் கண்களுக்கு காட்சி விருந்து படைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் பின்னணி இசை கலர்புல் காட்சிகளுக்கு ஏற்றபடி கமர்ஷியல் அம்சங்களோடு  பயணித்திருக்கிறார்.

ஸ்மார்ட் போன் செயலி எதை கேட்டாலும் கொடுக்கும் தொழில்நுட்பங்கள் உண்மையான காதலை  கொடுக்குமா? அல்லது அதன் மூலம் மனிதர்களிடம் இருக்கும் உண்மையான உணர்வுகள் மற்றும் காதலை அறிந்துக் கொள்ள முடியுமா?  கமர்ஷியல் மற்றும் கலர்புல்லான திரைப்படமாக மட்டும் இன்றி அதை காதல் உணர்வோடு சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

மொத்தத்தில், ‘Lik’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) செயலி?

error: Content is protected !!