‘கேம் ஆஃப் லோன்ஸ்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- நிவாஸ் ஆதித்தன், அபிநய் கிங்கர், ஆத்விக் ஜலந்தர், எஸ்தர் நோரோன்ஹா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- அபிஷேக் லெஸ்லி.
ஒளிப்பதிவாளர் :- சபரி.
படத்தொகுப்பாளர் :- டி. பிரதீப் ஜெனிஃபர்.
இசையமைப்பாளர் :- ஜோ கோஸ்டா.
தயாரிப்பு நிறுவனம் :- ஜே.ஆர்.ஜி புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- என்.ஜீவானந்தம்.
ரேட்டிங் 2.5./5.
கதாநாயகன் நிவாஸ் ஆதித்தன், வேலை எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கும் நிலையில் ஆன்லைனில் இருக்கும் சூதாட்ட செயலிகள் மூலம் சூதாட்டத்திற்கு அடிமையாகி, அதன் மூலம் ஆன்லைன் செயலி ஒன்றின் மூலம் கடன் வாங்கும் கதாநாயகன் நிவாஸ் ஆதித்தன், ஆன்லைன் செயலி ஒன்றின் மூலம் வாங்கிய அந்த கடனால் எதிர்பார்க்காத விபரீதத்தையும் விளைவுகளையும் சந்திக்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுள்ள நிலையில் லோன் வாங்கிய செயலிலிருந்து கடன் வசூல் செய்யும் அபிநய, மற்றும் ஆத்விக் ஜலந்தர், இருவரும் கதாநாயகன் நிவாஸ் ஆதித்தன், வீட்டில் வந்து கடன் செலுத்துமாறு நெருக்கடி கொடுக்கிறார்கள்.
அபிநய, மற்றும் ஆத்விக் ஜலந்தர், இருவரும் கதாநாயகன்
நிவாஸ் ஆதித்தனுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி என்ன
அதில் நெருக்கடியில் இருந்து கதாநாயகன் நிவாஸ் ஆதித்தன் தப்பித்தாரா? தப்ப வில்லையா ? என்பதுதான் இந்த ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நிவாஸ் ஆதித்தன், நடித்திருக்கிறார்.
பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நிவாஸ் ஆதித்தன், முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு, தனது மன போராட்டங்களை உடல் மொழி உணர்வுப்பூர்வமாக நடிப்பை கொடுத்து, பார்வையாளர்களை கதையுடன் பயணிக்க வைத்து இருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநய், தனது ஸ்டைலிஷான நடிப்பு மற்றும் வித்தியாசமான குணாதிசயங்கள் மூலம் கதாநாயகனுக்கு இணையாக கவனம் ஈர்க்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநய் உதவியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆத்விக், சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும், வில்லத்தனம், குணச்சித்திரம், நகைச்சுவை, மற்றும் கோபம் என அனைத்தையும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அருமையான நடிப்பை அளவாக கொடுத்து அசத்தியிருக்கிறார்.
இந்த ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக
எஸ்தர் நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் எஸ்தர், ஏமாந்து போகும் மனைவிகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சபரியின் ஒளிப்பதிவு மூலம் ஒரே வீட்டுக்குள் நகரும் கதை என்றாலும் அதை மிகவும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜோ கோஸ்டா, இசையில் பின்னணி இசை மூலம் அனைத்து காட்சிகளில் இருக்கும் பதற்றத்தையும், பரபரப்பையும் அதிகரித்திருக்கிறார்.
ஆன்லைன் சூதாடம் மூலம் பணத்தை இழப்பவர்கள், அதற்காக செயலி மூலம் எளிதாகவும், உடனடியாகவும் கிடைக்கும் கடனை பெற்று, அதை கட்ட முடியாமல் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதை மிகவும் அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர்
அபிஷேக் லெஸ்ஸி.
மொத்தத்தில், ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ திரைப்படம் ?.











