’மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- ஆனந்தராஜ், சம்யுக்தா, தீபா, சசிலாயா, முனிஷ்காந்த், ராமஸ், ஆராத்யா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- : ஏ.எஸ்.  முகுந்தன்.

ஒளிப்பதிவாளர் :- அசோக்ராஜ்.

படத்தொகுப்பாளர் :- எஸ். தேவராஜ்.

இசையமைப்பாளர் :- ஸ்ரீகாந்த் தேவா.

தயாரிப்பு நிறுவனம் :- அண்ணா புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- வி.சுகந்தி அண்ணாதுரை.

ரேட்டிங் 3.25./5.

சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும்  அந்தந்த பகுதிகளில் தாதாவாக இருக்கும் ஒரு தாதாவையும் அந்த ஏரியா ஏஜெண்டாக வைத்து அதன் மூலம் பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் சென்னை சிட்டில் மிகப் பெரிய தாதாவாக இருக்கும் கதாநாயகன் ஆனந்தராஜ், சென்னை சிட்டியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் அவர் மீது எநத ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, காவல்துறை அதிகாரி சம்யுக்தா சென்னை சிட்டி தாதாவன கதாநாயகன் ஆனந்தராஜ்யை கைது செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

இந்த நிலையில், தொழில் போட்டி காரணமாக கதாநாயகன் ஆனந்தராஜ் உடன் இருக்கும் சிலர் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள்.

இந்த இரண்டு தரப்பினரிடம் இருந்து கதாநாயகன் ஆனந்தராஜ் உயிர் தப்பினாரா? உயிர் தப்ப வில்லையா?, 

கதாநாயகன் ஆனந்தராஜ் நடத்தி வரும் மாஃபியா தொழிலை தொடர்ந்து நடத்தினாரா? நடத்த வில்லையா? என்பதுதான்  இந்த ’மெட்ராஸ் மாஃபியா கம்பேனி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ் நடித்திருக்கிறார்.

பல திரைப்படங்களில் நடிகர் ஆனந்தராஜ் வில்லனாக மிரட்டிவிட்டு தற்போது நகைச்சுவை நடிகராக முதன்மை கதாபாத்திரத்தில் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் வில்லத்தனமான நடிப்பு மூலம் மிரட்டவும் செய்கிறார், நக்கலான பேச்சின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைக்கவும் செய்திருக்கிறார். 

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சக்யுக்தா, காவல்துறை அதிகாரி  சீறுடையில் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறார்.

தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில்  ஆக்‌ஷன் காட்சிகளிலும் நமக்குள்ள படுத்தி நடிப்பு மூலம் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

ஆனந்தராஜ் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபா, கொடுத்த வேலையை எந்தவித குறையில்லாமல் சிறப்பான நடிப்பை கொடுத்து  சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

ஆனந்தராஜன் மகன் கதாபாத்திரத்தில் வீழ்ச்சரில் அமர்ந்து திரைப்படம் முழுவதும் நடித்திருக்கும் மோகன் கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

கொண்டித்தோப்பு வரதன் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முனீஷ்காந்த் திரைப்படம் முழுவதும் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்

ஆனந்தராஜின் மகளாக நடித்திருக்கும் ஆராத்யா, அளவான அழகு மற்றும் நடிப்பு மூலம் கவர்கிறார்.

ராம்ஸ், சசிலயா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில்  நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை மிகச் சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அசோக்ராஜின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை கலர்புல்லாக திரைப்படமாக்கி திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் தாளம் போட வைத்திருக்கிறார் 

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையில் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.

வி.சுகந்தி அண்ணாதுரை,  எழுதியிருக்கும் கதைக்கு சிறப்பான திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஏ.எஸ்.முகுந்தன், கதையாசிரியரின் எண்ணம்  சீரியஸானதாக இருந்தாலும், எழுதிய கதையை மிகவும் சிறப்பான திரை கதையை அமைத்து கமர்ஷியல் காமெடி ஜானர் மூலம் பணம் மிக சிறப்பான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன்.

மொத்தத்தில், ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’திரைப்படம் ரசிகர்கள் அனைவரையும் கவரக்கூடிய திரைப்படமாக அமைந்திருக்கிறது.

error: Content is protected !!