டிராகன் திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாது லோஹர், வி.ஜே.சித்து, ஹர்ஷத் கான், கே.எஸ் ரவிகுமார், மைஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், இந்துமதி – சித்த்ரா பி.எல்.தேனப்பன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அஸ்வத் மரிமுத்து.

ஒளிப்பதிவாளர் :- நிகெத் பொம்மி.

படத்தொகுப்பாளர் :- பிரதீப் இ ராகவ்

இசையமைப்பாளர் :- லியோன் ஜேம்ஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (பி) லிமிடெட்.

தயாரிப்பாளர் :- கல்பதி எஸ் அகோரம், கல்பதி எஸ் கணேஷ், கல்பதி எஸ் சுரேஷ். அர்ச்சனா கல்பதி.

ரேட்டிங் 3.5./5.

கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் பள்ளியில் படிக்கும் போது பிளஸ் 2 தேர்வில் 96 சதவீதம் மார்க் எடுத்து பள்ளியில் கோல்டு மெடல் வாங்குகிறார்.

தன் படிக்கும் பள்ளியில் படிக்கும் சக மாணவியை ஒரு தல பட்சமாக காதலிக்கிறார்.

அந்த சக மாணவி கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் காதலை ஏற்க மறுத்து விடுகிறார்.

பள்ளியில் முதல் மாணவனாக இருந்த கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் கல்லூரியில் ஒரு ரௌடியாக வளம் வருகிறார்.

அதற்குப் பின் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் கதாநாயகி அனுபமா பரமேஸ்வரனை காதலித்து வருகிறார்

கடைசியில் கல்லூரி முடிக்கும் போது நான்கு வருட கல்லூரி தேர்வுகளில் பெயில் ஆகி 48 ஹாரியஸ் வைத்துவிடுகிறார்.

இதனால் காதலி கதாநாயகி அனுபமா பரமேஸ்வரனும் காதலை பிரேக் அப் செய்துவிட்டு சென்று விடுகிறார்.

இத்தனை நாள் மனம் உடைந்த கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என முயற்சிக்க குறுக்கு வழியில் சென்று முன்னேற துடிக்கிறார் .

இந்த நிலையில் குறுக்கு வழியில் முன்னேற துடிக்கும் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் வாழ்க்கை முன்னேறினாரா? முன்னேறவில்லையா? என்பதுதான் இந்த டிராகன் திரைப்படத்தின் மீதி கதை.

இந்த டிராகன் திரைப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதன், பள்ளி மாணவன் மற்றும் கல்லூரி மாணவன் என கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக பொருந்தியத்தோடு மட்டுமல்லாமல், அதையும் தாண்டி வாழ்க்கையில், தோல்வியடைந்தவர் என்பது தெரியாமலேயே கெத்தாக வலம் வந்து பிறகு நொந்துப் போகும் காட்சிகளில் அசால்டாகவும் அருமையாகவும் அற்புதமாகவும் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் மீண்டும் தனது மிகப்பெரிய வெற்றியை பதித்து இருக்கிறார்.

இந்த டிராகன் திரைப்படத்தில் கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார்.

கதாநாயகி அனுபமா பரமேஸ்வரன் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழ் திரைப்பட உலகில் அவருக்கு நேர்த்தியான கதாபாத்திரம் அதை மிக நிறைவாக நடித்து இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன், அள்ள அள்ள குறையாத இளமையோடு வலம் வருகிறார்.

விரட்டி விரட்டி காதலித்தவன் வீணாப்போனப் பிறகு, என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அடித்துக் கொள், ஆனால் விட்டுவிடு..,என கேட்கும் காட்சியில் அருமையான நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்திருக்கிறார்.

மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் காயடு லோஹர், கவர்ச்சி மட்டுமின்றி நடிப்பிலும் மிக அருமையாக நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்கிறார்.

கதாநாயகன் பிரதீப் ரங்கநாதரின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜே சித்து, ஹர்ஷத் கான் காமெடிகள் சிறப்பு.

கல்லூரி முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிஷ்கின், கண்டிப்பு இல்லை என்றாலும் படிப்பு தான் வாழ்க்கையின் அடித்தளம் என்பதை மாணவர்களிடம் மிகவும் அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார்.

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பி.எல். தேனப்பன், மரியம் ஜார்ஜ், இந்துமதி என அனைவரும் திரைக்கதைக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி பிரமாண்டமான காட்சி அமைப்பின் மூலம் திரைப்படத்தில் ஒளிப்பதிவு மூலம் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு எவ்வாறு பயணித்த இருக்கிறார்.

கல்லூரி நடக்கும் மாணவ மாணவிகளின் அலப்பறைகள், மற்றும் காதல் தோல்வி, குறுக்கு வழியில் சென்றாலும் வெகு விரைவில் முன்னேற்றம், அதன் மூலம் கிடக்கும் பலன்கள் என்று கதாநாயகனின் வாழ்க்கை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி
வெற்றி மட்டுமே வாழ்க்கை இல்லை, தோல்வியடைந்தாலும் துவண்டு போகாமல் மீண்டும் எழுந்து ஓட ஆரம்பிப்பதும் வாழ்க்கை தான், என்பதை ஜாலியாக சொல்லி இளைஞர்களின் மனங்களில் இடம் பிடிக்கும் வழியில் இயக்கியிருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. .

மொத்தத்தில், இந்த ‘டிராகன்’ குடும்பத்துடன் சென்று திரையரங்கில் பார்த்துக் கொண்டாடும் திரைப்படமாக அமைந்திருக்கிறது.